“இங்கே மட்டும்தான் ஒருத்தன் தன் கடமையை செய்யறத்துக்கு லஞ்சம் கொடுக்கணும்” - ஐந்து மொழிகளில் அதகளம் பண்ணப்போகும் ஆண்டவர்!

 
Published : Oct 03, 2017, 03:52 PM ISTUpdated : Sep 19, 2018, 01:15 AM IST
“இங்கே மட்டும்தான் ஒருத்தன் தன் கடமையை செய்யறத்துக்கு லஞ்சம் கொடுக்கணும்” - ஐந்து மொழிகளில் அதகளம் பண்ணப்போகும் ஆண்டவர்!

சுருக்கம்

Kamal Hassan will be speak in five languages

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்து முடிந்த பிக்பாஸ் 100  வது நாள் நிறைவு விழாவில் உலகநாயகன் கமல் இயக்குனர் ஷங்கரின் 'இந்தியன் 2' படத்தில் நடிக்கப்போகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 21 வருடங்களுக்கு முன் வெளியான 'இந்தியன்' படத்தின் தொடர்ச்சி என தெரிகிறது.

கடந்த சில மாதங்களாக கமலின் அரசியல் விமர்சனம்  அவரின் அரசியல் பிரவேசம் பற்றி பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் நிலையில் 'இந்தியன் 2' படத்தில் இன்றைய அரசியலில் நடக்கும் ஊழல், அரசியல் தில்லாலங்கடியை தோலுரிக்கும் ஒரு நல்ல மெசேஜ் சொல்லக்கூடிய படமாக அமையும். மேலும் இப்படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் என மற்ற மொழிகளும் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிட திட்டமாம். தெலுங்கில் இப்படத்திற்கு 'பாரதியூடு 2' என டைட்டில் வைத்திருக்கிறார்கள். 

இந்தியன் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன்,மனீஷா கொய்ராலா, சுகன்யா, கவுண்டமணி  மற்றும் பலரும் நடித்துள்ளனர். A. M. ரத்னம் தயாரிப்பில் உருவான இத்திரைப்படத்தை  சூர்யா மூவீஸ் வெளியிட்டது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் அனைத்துப் பாடல்களும் மெகா ஹிட் அடித்தது. இப்படத்திற்கு வாலி மற்றும் வைரமுத்து இருவரும் பாடல்கள் எழுதியுள்ளனர்.

இன்னொரு சுதந்திரத்துக்குப் போராடும் வீரனாக…  லஞ்சத்துக்குக் கொள்ளிபோடத்  துணிந்த வயோதிக தியாகியாக.. வெள்ளி நரையும், சுருங்கிய முகமும், தளர்ந்த உடலும், தடுமாறாத உறுதியும் கொண்ட ‘இந்தியன்’ தாத்தாவாக நடித்து இந்திய ரசிகர்களின் ஒட்டுமொத்த பாராட்டுக்களை கமல் கட்டிக்கொண்ட படமிது. கமலுக்கு மூன்றாவது தேசிய விருதினை பெற்றுத் தந்ததோடு திரைத்துறையின் உயரிய விருதான ஆஸ்கார் விருதிற்காக இந்தியா சார்பில் பரிந்துரை செய்யப்பட்டது.

“இங்கே மட்டும்தான் ஒருத்தன் தன் கடமையை செய்யறத்துக்கு லஞ்சம் கொடுக்கணும்” – இந்தியன் திரைப்படத்தில் வந்த பொதுமக்கள் அதிகமாக கைதட்டிய வசனமிது. 21 வருடங்கள் கழித்து மிக பிரமாண்டமாக உருவாகவிருக்கும் இரண்டாம் பாகம் தமிழ், தெலுங்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை எகிறவைத்திருக்கிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

லட்சங்களில் சம்பளம் வாங்கிய டான்சர் குயீன் ரம்யா, அழகு ராணி வியானா: ஒரு நாளைக்கு எத்தனை லட்சம்?
அடுத்தடுத்து நடையை கட்டிய போட்டியாளர்கள்: இந்த வாரத்தில் டபுள் எவிக்‌ஷன்: பிக் பாஸின் அதிரடி ட்விஸ்ட்!