இந்த இளம் நடிகர் யாருனு தெரியுதா? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

Published : May 26, 2020, 07:57 PM IST
இந்த இளம் நடிகர் யாருனு தெரியுதா? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

சுருக்கம்

பிரபல இளம் காமெடி நடிகர் ஒருவர், தான் வயதான தோற்றத்தில், உள்ள புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளார். அவர் ஏதாவது ஆப் பயன்படுத்தி இந்த புகைப்படத்தை வெளியிட்டாரா? என்று கூட பலர் இவரிடம் ஷாக் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.  

பிரபல இளம் காமெடி நடிகர் ஒருவர், தான் வயதான தோற்றத்தில், உள்ள புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளார். அவர் ஏதாவது ஆப் பயன்படுத்தி இந்த புகைப்படத்தை வெளியிட்டாரா? என்று கூட பலர் இவரிடம் ஷாக் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

வயசான தோற்றத்தில் இருக்கும் இந்த பிரபலம் வெறும் யாரும் அல்ல, தமிழில் பல படங்களில் காமெடியனாகவும், குணச்சித்திர வேடத்திலும் நடித்து வரும் நடிகர் பால சரவணன். 

இவர் 2013-ம் ஆண்டு 'குட்டி புலி' படத்தின் மூலம் அறிமுகமாகி பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், வேதாளம், ஒரு நாள் கூத்து, டார்லிங், போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்கள் நடிக்கும் படங்களிலும் கமிட் ஆகி வருகிறார்.

சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அவர், அவ்வப்போது தன்னுடைய மனதில் படும் கருத்துக்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், கொரோனா பிரச்சனை தமிழகத்தில் தலை தூக்கிய போது, சானிடைசர், போன்ற பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டதை எதிர்த்து ஆதங்க பட்டு கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்நிலையில் இந்த ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதமாக சலூன் கடைகள் திறக்காததால் என்னவோ இந்த கெட்டப்புக்கு மாறியுள்ளார் பால சரவணன். இந்த புகைப்படத்தை வெளியிட்டு வாழ்தல் அழகு என தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் உண்மையாகவே உங்களுக்கு வயசு ஆகிடுச்சா என கேள்வி எழுப்பி வருகிறார்கள். விரைவில் இந்த கேள்விக்கு அவரே பதில் சொல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சரத்குமார் உடனான காதல் முறிவுக்கு பின்... திருமணமே செய்யாமல் முரட்டு சிங்கிளாக வாழும் நடிகை..!
அடேய் விடுங்கடா... கூட்டத்தில் சிக்கிய அனிருத்; அலேக்காக தூக்கிச்சென்ற பவுன்சர்கள் - வைரல் வீடியோ