சிறிய வயதில் சீரியலில் குட்டி கிருஷ்ணனாக நடித்த தமிழ் ஹீரோ..! முதல் முறையாக வெளியிட்ட புகைப்படம்!

By manimegalai aFirst Published May 26, 2020, 7:20 PM IST
Highlights

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் பிரபலங்கள், பலர் அவ்வப்போது ரசிகர்களுடன், தங்களுடைய பழைய நினைவுகளை பகிர்ந்து வருகிறார்கள். 
 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் பிரபலங்கள், பலர் அவ்வப்போது ரசிகர்களுடன், தங்களுடைய பழைய நினைவுகளை பகிர்ந்து வருகிறார்கள். 

அதே போல், சீரியல் ரசிகர்களுக்கு பழைய நியாபகத்தை ஏற்படுத்தும் விதமாக, தொலைக்காட்சிகளும்,  ராமாயணம், மஹாபாரதம், சக்தி மான், ஸ்ரீ கிருஷ்ணா, போன்ற பழைய சீரியல்களை மீண்டும் ஒளிபரப்பி வருகிறது. இப்படி ஒளிபரப்பப்படும் சீரியல் மூலம் தன்னுடைய குழந்தை பருவத்தில் நடித்த சீரியல் பற்றி தெரிவித்துள்ளார் பிரபல நடிகர்.

தமிழில் கடந்த 2007 ஆம் ஆண்டு  'முருகா' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் அசோக். இந்த படத்தை தொடர்ந்து  'புடிச்சிருக்கு', 'கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்' , 'கோழி கூவுது' உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது சித்திரம் பேசுதடி 2 , மற்றும் உனக்காக தானே ஆகிய படங்களில் நடித்துள்ளார். 

இந்நிலையில் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் அசேக் தனது சிறுவயதில் ஸ்ரீ கிருஷ்ணனாக நடித்த புகைப்படத்தை வெளியிட்டு, முதன் முதலில் கேமரா முன் தோன்றியது ஸ்ரீ கிருஷ்ணா நாடகத்தில் கிருஷ்ணாவாக நடித்த போது என கூறியுள்ளார்.  

அந்த சீரியல் டிடி நேஷனல் சேனலில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது. பாருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இவரை பார்த்து பலர் அந்த குட்டி கிருஷ்ணனாக நடித்தது நடிகர் அசோக்கா என ஆச்சர்யமாக கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இவரின் ட்விட் இதோ...

The first time I faced the camera.
My on-screen television debut as lil' Krishna in Sri Ramanand Sagar's teleserial

1st Serial - Krishna
1st Movie - Murugaa (though not a mythological film)
May the Divine Blessings continue to pour pic.twitter.com/valhvX9Vzp

— ACTOR ASHOK KUMAR (@ashokactor)

click me!