
16 பெண்களை ஏமாற்றிய ஆர்யா .?! கடைசியில் சொன்ன காரணம் இதோ....
16 பெண்களை தேர்ந்தெடுத்து, எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியின் மூலம் நடிகர் ஆர்யா அவருக்கு பெண் தேடும் பணியில் இறங்கினார்
நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அனைத்து பெண்களிடமும் நன்றாக பழகி சில பல காரணங்களால் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டாலும், கடைசியில் மூன்று பெண்கள் மட்டுமே மிஞ்சினர்
இலங்கையை சேர்ந்த சுசானா, கேரளாவை சேர்ந்த சீதா லக்ஷ்மி, அகாதா இவர்களில் யாரை ஆர்யா தேர்வு செய்து மனைவியாக ஏற்றுக்கொள்ளப் போகிறார் என்ற ஆவல் மக்களிடேயே இருந்தது
கடைசி நேர நிகழ்ச்சியில், கடைசி டோக்கேன் ஆப் லவ், யாருக்கு கொடுக்க போகிறாரோ என்ற ஆவலுடன், அனைவரும் அப்படியே அமைதியாக உற்சாகமாக காத்திருந்த நிலையில், ஆர்யா சொன்ன பதில் அனைவரையும் கோபப்பட வைத்தது
3 பேரில் ஒருவரை தேர்வு செய்தால், மற்றவர்களுக்கு வலிக்குமாம்
ஆர்யா சொன்ன பதில் இதோ..
3 பேரில் யாரையும் என்னால் தேர்வு செய்ய முடிய வில்லை....எந்த காரணத்தை சொல்லியும் என்னால் மற்ற இருவரை நீக்க முடியாது.... என்னுடைய மனநிலை இப்போது சரி இல்லை....எனக்கு இன்னும் சில நாட்கள் நேரம் கால அவகாசம் தேவைப்படுகிறது என கூறி உள்ளார் ஆர்யா.
பின்னர்,ஆர்யாவின் இந்த பதிலால் இந்த நிகழ்ச்சியின் மூலம் எவரையும் தேர்வு செய்யும் நினைப்பில் ஆர்யா இல்லையோ என்ற சந்தேகம் எழுந்ததை அடுத்து....இது முழுக்க முழுக்க டிவி ஷோக்காகத்தான் இப்படி செய்யப்படுகிறது என்பது போல் அமைந்துவிட்டது.
இதனை தான் இலங்கை பெண் சுசானாவின் அப்பா, ஆர்யாவை பார்த்து இது என்ன ஷோக்காக நடத்தப்படுகிறதா என்று கேள்வி எழுப்பினார்.
ஆக மொத்தத்தில் 16 பெண்களுக்கும் ஆர்யா அல்வா கொடுத்துவிட்டதாக பலரும் கருத்து தெரிவித்து உள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.