Valimai FDFS : அப்போ வில்லன்... இப்போ ரசிகன் - அஜித் ரசிகர்களோடு அமர்ந்து வலிமை படம் பார்த்த அருண்விஜய்

Ganesh A   | Asianet News
Published : Feb 24, 2022, 07:07 AM IST
Valimai FDFS : அப்போ வில்லன்... இப்போ ரசிகன் - அஜித் ரசிகர்களோடு அமர்ந்து வலிமை படம் பார்த்த அருண்விஜய்

சுருக்கம்

அஜித்தின் வலிமை படத்தை பார்க்க திரையுலக பிரபலங்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் வலிமை படத்தின் முதல் காட்சியை அஜித் ரசிகர்களோடு அமர்ந்து நடிகர் அருண் விஜய் பார்த்துள்ளார்.

நடிகர் அஜித் - எச்.வினோத் கூட்டணியில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில், அதே கூட்டணியில் தற்போது 2.5 ஆண்டுகள் கழித்து மாஸாக வெளியாகி உள்ள திரைப்படம் வலிமை (Valimai). அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.

இரண்டு ஆண்டுகள் கடின உழைப்புக்கு பின் இன்று உலகமெங்கும் வலிமை திரைப்படம் ரிலீசாகி உள்ளது. இது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளில் வெளியாகி உள்ளது. இன்று காலை 4 மணிக்கு வலிமை (Valimai Movie) படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டது. ரசிகர்கள் ஆரவாரத்தோடு இப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், அஜித்தின் வலிமை படத்தை பார்க்க திரையுலக பிரபலங்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் வலிமை படத்தின் முதல் காட்சியை அஜித் ரசிகர்களோடு அமர்ந்து நடிகர் அருண் விஜய் (Arun Vijay) பார்த்துள்ளார். சென்னையில் உள்ள காசி தியேட்டரில் அவர் வலிமை படத்தை கண்டுகளித்தார்.

கவுதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்திருந்த அருண் விஜய், தற்போது அவரது ரசிகனாக வந்து வலிமை படத்தின்  முதல் காட்சியை பார்த்துள்ளார். அவர் திரையரங்கில் ரசிகர்களோடு அமர்ந்து வலிமை படத்தை பார்த்தபோது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?