கோலிவுட் உலகம்.. கொடிகட்டி பறந்த கனகா.. திடீரென மாயமாக காரணம் என்ன? மனம் திறந்த சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்!

Ansgar R |  
Published : Jan 29, 2024, 08:35 PM IST
கோலிவுட் உலகம்.. கொடிகட்டி பறந்த கனகா.. திடீரென மாயமாக காரணம் என்ன? மனம் திறந்த சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்!

சுருக்கம்

Sarathkumar About  Actress Kanaga : தமிழ் திரையுலகில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து டாப் ஹீரோயினாக திகழ்ந்தவர் தான் கனகா. 

தமிழ் திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வந்த பிரபல நடிகை தேவிகா அவர்களுடைய மகள் தான் நடிகை கனகா. தனது தாயைப் போல சினிமா மீது கொண்ட காதலின் காரணமாக தனது 26 ஆவது வயதில் அவரும் நாயகியாக களம் இறங்கினார். குறிப்பாக அவர் ஹீரோயினாக களம் இறங்கிய முதல் திரைப்படமே தமிழ் சினிமா வரலாற்றில் இன்றளவும் அதிக நாள் ஓடிய படங்களில் ஒன்றாக திகழ்ந்துவரும் "கரகாட்டகாரன்" திரைப்படம் தான். 

நடிகை கனகா அவர்கள் திரையுலகில் தான் அறிமுகமான வெறும் 6 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் இவர் பல்வேறு திரைப்படங்களை நடித்துள்ளார். ஆனால் 1995 ஆம் ஆண்டுக்கு பிறகு அவர் திரைப்படங்களில் நடிப்பது பெரிய அளவில் குறைந்தது. 

ஷைனிங்கான கருப்பு ஆடை.. சூப்பரா சில போஸ்.. "Haters இது உங்களுக்கு தான்" - பிக் பாஸ் அர்ச்சனாவின் பதிவு வைரல்!

வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை கனகா, இறுதியாக கடந்த 2006 ஆம் ஆண்டு பிரபல நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான "சில்லுனு ஒரு காதல்" திரைப்படத்தில் நடித்ததோடு தனது திரையுலக பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துக்கொண்டார். அதன் பிறகு சுமார் 17 ஆண்டுகளாக அவர் இதுவரை எந்த திரைப்படங்களிலும் நடிப்பதில்லை. 

பொதுவெளியும் அவர் வருவதில்லை, அண்மையில் குட்டி பத்மினி நடிகை கனகாவோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்ட பொழுது தான் அவர் எந்த அளவுக்கு ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியுள்ளார் என்பது பலருக்கு தெரியவந்தது. இந்நிலையில் பிரபல நடிகர் சரத்குமார் அவர்களுடன் கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியான "சாமுண்டி" என்கின்ற திரைப்படத்தில் கனகா நடித்திருந்த நிலையில், அண்மையில் ஒரு பேட்டியில் சரத்குமார் அவர்களிடம் கனகாவை பற்றி சில கேள்விகள் கேட்கப்பட்டது. 

குறிப்பாக அவர் திரையுலகையை விட்டு ஒதுங்க காரணம் என்ன என்றும் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த நடிகர் சரத்குமார் அவர்கள், நடிகை கனகா ஒரு ஒப்பற்ற உழைப்பாளி, சினிமாத்துறை மீது அவர் கொண்டிருந்த காதல் அதீதமானது. ஆனால் அவர் வாழ்க்கையில் நடந்த சில ஏமாற்றங்களும், வருத்தங்களும் அவர் மனதில் அழியாத காயமாக மாறியது. 

அதுவே நாளடைவில் அவருக்கு ஒரு மிகப்பெரிய மன அழுத்தமாக மாறி அவர் சினிமாவை விட்டு காரணமாக அமைந்தது என்று நான் நினைக்கின்றேன் என்றார் அவர். சினிமா துறையில் பலருக்கும் இது போன்ற மன அழுத்தங்களால் அவதிப்படுகின்றனர். இதனால் தான் நான் பலமுறை சினிமா துறையில் பயணிப்பவர்களுக்கு நல்ல ஆலோசனை வழங்க வேண்டும் என்று கூறி வருகிறேன் என்றார் சரத்குமார். 

சக்கைபோடு போடும் சிங்கப்பூர் சலூன்.. எமோஷனல் ஹீரோவாக மாறியுள்ள ஆர்.ஜே.பாலாஜி - வெளியான அவர் சம்பள விவரம்!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

போலீஸ் விசாரணையில் விசாலாட்சி கொடுத்த ட்விஸ்ட்... கொற்றவையிடம் என்ன சொன்னார்? எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
துரந்தர் படத்தின் 7 நட்சத்திரங்களின் வயது என்ன? படம் ஹிட் கொடுக்குமா?