தனுஷ் இயக்கத்தில் ராயன்.. அசத்தலான நடிகை குறித்து வெளியான அப்டேட் - படத்தில் அவர் கேரக்டர் என்ன தெரியுமா?

By Ansgar RFirst Published Feb 24, 2024, 11:59 PM IST
Highlights

Raayan Movie Actress : தனுஷ் இயக்கத்தில் உருவாகும் அவரது 50வது படத்தில் நடித்திருக்கும் நடிகர், நடிகைகள் குறித்த தகவல்களை அவரே தினம்தோறும் வெளியிட்டு வருகின்றார்.

நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் இரண்டாவது திரைப்படமும், அவர் நடிப்பில் உருவாகியுள்ள ஐம்பதாவது திரைப்படமுமான "ராயன்" திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் அந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் கதாபாத்திரங்கள் குறித்த தகவல்களை கடந்த சில நாட்களாக வெளியிட்டு வருகிறார் இந்த படத்தின் இயக்குனர் தனுஷ்.

அந்த வகையில் இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் அவர்களின் சகோதரர்களாக பிரபல நடிகர் காளிதாஸ் ஜெயராம் மற்றும் சந்தீப் கிஷன் ஆகியோர் நடிப்பதாக பர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் தெரிய வந்தது. அதன் பிறகு இந்த திரைப்படத்தில் நெகட்டிவ் ரோலில் பிரபல நடிகர் "நடிப்பு அரக்கன்" எஸ் ஜே சூர்யா நடிக்கின்றார் என்ற தகவலை வெளியிட்டிருந்தார் நடிகர் தனுஷ். 

போயஸ் கார்டன்.. சசிகலா கட்டிய புது வீடு - மனைவியுடன் நேரில் சென்று வாழ்த்து சொன்ன சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

அதன்பின் இந்த திரைப்படத்தில் தன்னை நடிகனாக உருவாக்கிய தனது அண்ணனும், பிரபல இயக்குனருமான செல்வராகவன் நடிப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். நேற்று இந்த திரைப்படத்தில் மூத்த நடிகர் பிரகாஷ்ராஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறியுள்ள நடிகர் தனுஷ் தற்பொழுது இந்த திரைப்படத்தில் இணைந்து பெண் பிரபலம் பற்றி கூறியுள்ளார். 

From the world of pic.twitter.com/vpSc2gfGZI

— Dhanush (@dhanushkraja)

சார்பட்டா பரம்பரை போன்ற நல்ல தாரணமான படங்களில் நடித்த பிரபல நடிகை துஷாரா விஜயன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்திருப்பதாக கூறியுள்ளார் தனுஷ். மேலும் தற்பொழுது கிடைத்துள்ள தகவலின்படி இந்த திரைப்படத்தில் துஷாரா, நடிகர் தனுஷ் அவர்களின் தங்கையாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

சிக்கென்ற ஆடை.. தாஜ்மஹால் முன் அசத்தலாக யோகாசனம் - ரசிகர்களை பிரம்மிக்க வைத்த அதுல்யா ரவி!

click me!