சென்னை அண்ணாசலையில், கவிஞர் மௌனன் யாத்ரிகாவின் ‘எருமை மறம்’ நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி கலந்து கொண்டு நூல் வெளியிட்டார்.
நாடாளுமன்ற தேர்தலில் பானை சின்னத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வெற்றி பெறுவதற்கு ஆதரவாக இருப்பேன் என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணாசலையில், கவிஞர் மௌனன் யாத்ரிகாவின் ‘எருமை மறம்’ நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி கலந்து கொண்டு நூல் வெளியிட்டார். இதை இயக்குநர் பா.ரஞ்சித் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய பா.ரஞ்சித்: சமீப காலமாக குறிப்பாக, இந்திய சூழலில் பல தலைவர்களை நாம் பார்த்திருப்போம். குறிப்பாக நான் திருவள்ளூர் மாவட்டம் என்பதால் பூவை மூர்த்தியாரை நேரடியாக பார்த்தது உண்டு. ஆனால் மக்களுக்காகத் தனது வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் கொடுப்பது சாதாரண விஷயம் அல்ல. ரொம்ப முக்கியமானது. ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்ததிலிருந்து தூங்குவது வரை, மக்களுக்காகவே பேசி, அவர்களுக்காகவே சிந்தித்து, அவர்களின் நலன்களை பற்றி யோசித்து தன்னுடைய நலன்களை கூட பார்க்காமல் இருக்கிறார்.
undefined
இதையும் படிங்க: மோடி 3வது முறையாக பிரதமர் பொறுப்பேற்க தமிழகம் நிச்சயம் துணை நிற்கும்.. அண்ணாமலை அதிரடி சரவெடி!
ஆனால் திருமாவளவன் தேர்ந்தெடுத்த செயல் வடிவம், தன் மக்களுக்காக தன்னை ஒப்புவித்தல் என்பது ரொம்ப முக்கியமான ஒன்று. அந்த பொறாமை எப்போதுமே திருமாவளவன் மேல் உண்டு. எல்லாராலும் அது செய்ய முடியாது. அப்படியிருந்ததினால் தான் வெல்லும் ஜனநாயகம் என்ற மிகப்பெரிய மாநாட்டை நடத்தி பல லட்சம் மக்களை திரட்டியிருக்கிறார். இந்தியாவே அசந்து போகிற அளவிற்கு இளைஞர்களை ஒன்று திரட்டியுள்ளார். அந்த காட்சியை பார்க்கும் போது நமக்கே ஒரு எழுச்சி வருகிறது. அந்த கூட்டத்திலும் இந்த கூட்டத்திலும் எங்கேயுமே எந்த வன்முறையும் அசம்பாவிதங்களும் நடக்கவில்லை.
இதையும் படிங்க: ஒரு சீட் கேட்ட மனித நேய மக்கள் கட்சி.. அரசு பதவி கொடுத்து சமாதானம் செய்ய முயலும் ஸ்டாலின்- நடந்தது என்ன.?
சினிமா மாஸ் காட்சி போல ஒடுக்குமுறையை திருமாவளவன் எதிர்க்கிறார். பானை சின்னத்தில் விசிக போட்டியிடுவது முக்கியமானது. விசிக வெற்றி பெற வேண்டும் என்பது மக்கள் விருப்பம். பானை சின்னம் வெற்றி பெற ஆதரவாக இருப்போம். திருமாவளவன் போட்டியிடும் தொகுதியில் மிகப்பெரிய வெற்றியடைய ஆதரவாக நிற்க வேண்டும் என்றார்.