
அதிமுக-வை சேர்ந்த ஏவி ராஜூ என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரபல நடிகை குறித்து சொன்ன கருத்து மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. இதனால் கொந்தளித்த கோலிவுட் பிரபலங்கள், அவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி வலியுறுத்தினர். எதிர்ப்புகளை பார்த்து பதறிப்போன ஏவி ராஜூ, பின்னர் தான் அந்த நடிகையை சொல்லவில்லை அவர் பெயரில் இருக்கும் வேறொருவரை குறிப்பிட்டு பேசினேன் என விளக்கம் அளித்தார்.
ஏவி ராஜூ முதலில் அளித்த பேட்டியில், கூவத்தூரில் தாங்கள் தங்கியிருந்த போது நடிகர் கருணாஸ் தான் நடிகைகளை அங்கு அழைத்து வந்ததாகவும் பேசி இருந்தார். ஏவி ராஜூவின் இந்த பேச்சுக்கு சம்பந்தப்பட்ட நடிகை திரிஷா கண்டனம் தெரிவித்ததோடு, தன்னிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்றும் எச்சரித்து இருந்தார்.
இதையும் படியுங்கள்... நடிகைகள் எல்லாம் விபச்சாரிகளா? இந்த விஷயம் தான் எனக்கு ரொம்ப வலிக்குது! பிரபல நடிகைக்கு ஆதரவாக சீரிய கஸ்தூரி!
அதேபோல் நடிகர் கருணாஸும், தன் மீது வன்மம் கொண்டு அவதூறு மற்றும் அறுவருக்கத் தக்க வகையில் பொய்யான தகவலை பரப்பி வந்த அரசியல் கட்சி சார்ந்த A.V ராஜூ மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் ஏற்கனவே புகார் செய்திருந்தார். நேற்று மீண்டும், யூடியூப் சானலில் தவறான தகவலை பரப்பி வரும் தமிழா பாண்டியன், பயில்வான் ரங்கநாதன் மற்றும் பல யூடியூப் சேனல்கள் மீது சட்டப் படி நடவடிக்கை எடுக்க சென்னை கமிஷனரிடம் கருணாஸ் புகார் செய்தார்.
இதையும் படியுங்கள்... துளியும் உண்மை இல்லை! மனஉளைச்சலில் தவிக்கிறேன்.. நடிகர் கருணாஸ் ஏவி ராஜு மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.