
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நேற்று திடீர் என மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட விஷயம் தீ போல் பரவியது. இதனால் பிரபலங்கள் பலர் தொடர்ந்து அவருக்கு என்ன ஆனது என நலம் விசாரித்து வருகின்றனர்.
அமிதாப் பச்சன்:
பாலிவுட் திரையுலகில் சூப்பர் ஸ்டார் என்கிற அந்தஸ்தைப் பெற்ற அமிதாப் பச்சன் 75 இவருக்கு நேற்று மாலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் குடும்பத்தினர் இவரை உடனடியாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவ மனையில் சேர்த்தனர்.
மருத்துவர்கள் கூறியது:
அமிதாப் பச்சனுக்கு சிகிச்சை அளித்தது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், இவர் கடுமையான முதுகுவலி மற்றும் கழுத்துவலியால் அவதிப்பட்டு வந்ததாகவும் அதற்கு தற்போது சிகிச்சை கொடுத்துள்ளதாக தெரிவித்தனர்.
உறவினர்கள் கூறியது:
அமிதாப் பச்சன் திடீர் என உடல் நலக்குறைவால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து அவருடைய உறவினர்கள் கூறுகையில், இது வழக்கமான மருத்துவ பரிசோதனை தான் என்றும் வெளி நோயாளிகள் பிரிவில் வைத்து நடந்ததாகவும் தற்போது அமிதாப் பச்சன் நலமுடன் உள்ளதாக தெரிவித்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.