தமிழ் திரையுலகில் மாஸ் நடிகராக வலம் வரும் அஜித்குமார், தன் கையால் பிரியாணி சமைத்து தன்னுடைய நண்பர்களுக்கு பரிமாறி இருக்கிறார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவர் கைவசம் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு திரைப்படங்கள் உள்ளன. இதில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. அதேபோல் குட் பேட் அக்லி படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வருகிற ஜூன் மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
நடிகர் அஜித்துக்கு சினிமாவை தாண்டி பைக் ரைடிங் செய்வதில் அதீத ஆர்வம் உண்டு. இதனால் தனக்கு ஓய்வு கிடைக்கும் நேரங்களில் நண்பர்களுடன் பைக்கில் சுற்றுலா கிளம்பி விடுவார். அவருக்கு உலகம் முழுவதும் பைக்கில் உலா வர வேண்டும் என்பது தான் நீண்ட நாள் ஆசை, அந்த ஆசை படிப்படியாக நிறைவேறி வருகிறது. நடிகர் அஜித் கடந்த ஆண்டு தன்னுடைய உலக பைக் சுற்றுலாவை தொடங்கி அதன் முதல் கட்டத்தை முடித்துவிட்டார்.
இதையும் படியுங்கள்... Ajithkumar : இளையராஜா இசையில் அஜித் ஹீரோவாக நடிச்சது ஒரே ஒரு படம் தானா... அதுவும் யார் டைரக்ஷன்ல தெரியுமா?
அதன்படி முதற்கட்டமாக இந்தியா முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அஜித்குமார். அடுத்தகட்டமாக பல்வேறு நாடுகளில் பைக் ட்ரிப் மேற்கொள்ள உள்ளார். தற்போது அடுத்தடுத்து இரண்டு பட வேலைகளில பிசியாக இருப்பதால், அதில் நடித்துமுடித்துவிட்டு தன்னுடைய உலக பைக் சுற்றுலாவை முழுவீச்சில் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார். இதனால் குட் பேட் அக்லி படத்தில் நடித்து முடித்த பின்னர் அவர் சினிமாவில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெறுவார் எனவும் கூறப்படுகிறது.
பிரியாணி சமைத்த அஜித் pic.twitter.com/cPH4ifZgbR
— Asianetnews Tamil (@AsianetNewsTM)தற்போது விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் தாமதமாகி வருவதால், அந்த கேப்பில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் பைக் ட்ரிப் மேற்கொண்டு வருகிறார் அஜித். விடாமுயற்சி பட வில்லன் ஆரவ்வும் அஜித்துடன் சென்று இருக்கிறார். இந்த பைக் ட்ரிப்பின் போது தன்னுடன் வந்த சக நண்பர்களுக்கு நடிகர் அஜித் தன் கையால் கமகமவென பிரியாணி சமைத்துக் கொடுத்துள்ளார். அவர் பிரியாணி சமைக்கும் வீடியோ தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... Aditi Shankar : தொட்டதெல்லாம் ஹிட்டு... லக்கி ஹீரோயினாக மாறிய அதிதி ஷங்கரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?