குழப்பத்தில் நடிகர் அஜித்.! வலிமை படம் எப்ப வரும்..!!

By Thiraviaraj RMFirst Published Feb 18, 2020, 11:33 PM IST
Highlights

ஆளில்லா விமானம் தயாரிக்கும் ஒரு புதிய திட்டத்தில் மாணவர்களுடன் இணைந்து  நடிகர் அஜித் ஈடுபட்டு வருவதால் அவர் நடித்து வரும் வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பு உரிய காலத்திற்குள் முடிக்கமுடியாத

 T.Balamurukan

ஆளில்லா விமானம் தயாரிக்கும் ஒரு புதிய திட்டத்தில் மாணவர்களுடன் இணைந்து  நடிகர் அஜித் ஈடுபட்டு வருவதால் அவர் நடித்து வரும் வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பு உரிய காலத்திற்குள் முடிக்கமுடியாத சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

 'டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது' என்ற ஒரு விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று வழங்கப்படுகிறது. இந்த விருது, விஞ்ஞான வளர்ச்சி, மனிதவியல் மற்றும் மாணாக்கர் நலன் ஆகியவற்றிற்கு பாடுபட்டு வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்படும். தமிழக அரசின் 2018 அப்துல் கலாம் விருது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திலுள்ள வான்வெளி ஆராய்ச்சி மையமான தக்‌ஷா குழுவுக்கு வழங்கப்பட்டது. இந்தக் குழு நடிகர் அஜித்தின் தலைமையில் இயங்க கூடியது என்பது குறிப்பிடத்தக்கது. 

 தொழில் நுட்பக் கல்லூரியான மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி  நிர்வாகம் அழைத்தபோது அதை விருப்பத்துடன் அதை ஏற்றுக் கொண்டார் அஜித். ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் நடைபெற்ற மிகவும் புகழ்பெற்ற "மெடிக்கல் எக்ஸ்பிரஸ் - 2018 யுஏவி சேலஞ்ச்' எனும் போட்டியில் எம்.ஐ.டி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நடிகர் அஜித், டீம் தக்‌ஷா குழுவினரின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இந்தத் துறையில் அஜித்துக்கு உள்ள நிபுணத்துவத்தைக் கண்டுஅவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. ஒவ்வொருமுறையும் இவர் கல்லூரிக்கு வந்தால் அவருக்கு வழங்கப்படும் பணத்தை அந்தக் கல்லூரியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கே வழங்கிவிடுவார் அஜித்.

அஜித் குழுவினர் கண்டுபிடிக்கு ஆளில்லா விமானம் எதற்கு?

ஒரு மருத்துவமனையின் ஆய்வுக்கூடத்திலிருந்து 30 கிலோமீட்டருக்கு அப்பால் வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களால் தவிக்கும் நோயாளிகள் அல்லது தொலை தூர கிராமங்களில் உள்ள நோயாளிகளின் ரத்த மாதிரியைப் பெற்று வரும் வகையில் ஆளில்லா விமானத்தை உருவாக்குவது தான், இந்த போட்டிக்கான சவால். இதை எப்படி வடிவமைக்கலாம், எப்படி திரும்பவும் வரும் வகையில் செய்யலாம் என்று திட்டமிட்டு அதைச் செய்வதில் தான் மாணவர்களின் திறமையே இருக்கிறது. 

இந்நிலையில் இதுபோன்ற ஒரு குழுவினருடன் அஜித் மீண்டும் இணைந்து பிஸியாக இருப்பதால் தான் "வலிமை" படப்பிடிப்புக்குச் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. தக்‌ஷா குழு போன்று மற்றொரு கல்லூரி மாணவர்களுடன் இணைந்து ஆளில்லா விமானம் குறித்த ஒரு திட்டத்தில் அஜித் ஈடுபட்டு வருவதால் "வலிமை" படப்பிடிப்பில் அவரால் தொடர்ந்து கலந்துகொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. யுஏவி தொடர்பான திட்டத்தில் அஜித்தின் பங்களிப்பு மார்ச் மாதம் முடிவடைகிறது. எனவே அதன்பிறகு தான் அஜித்தால் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியும் என்கிறது சினிமா வட்டாரம். 

அஜித் சம்பந்தப்பட்ட காட்சிகளைத் தவிர இதர காட்சிகளை இந்தக் காலக்கட்டத்தில் எடுத்துவிடுமாறு வினோத்திடம் கூறியுள்ளாராம் அஜித். இதனால் கதாநாயகன் இல்லாமல் வலிமை படப்பிடிப்பைத் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தக் காரணங்களால் வலிமை படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளிப் போகவும் வாய்ப்பு உள்ளதாம். வலிமை படம் எப்போது திரைக்கு வரும் என்பதை படத்தின் இயக்குனர் பிறகு அறிவிப்பார்.

click me!