”இந்திய அரசின் ட்ரோன்களை தயாரிக்க தேர்வானது நடிகர் அஜித்குமாரின் தக்‌ஷா குழு.." AK ரசிகர்கள் கொண்டாட்டம் !

By Raghupati R  |  First Published Apr 21, 2022, 11:56 AM IST

அண்ணா பல்கலைக்கழகத்தின் தக்‌ஷா (DAKSHA) ஆளில்லா விமானம் குழு மத்திய அரசுக்கு ட்ரோன்களை தயாரித்து கொடுப்பதற்கு தேர்வாகியுள்ளது.


அண்ணா பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் Aerospace துறை சார்பாக தக்‌ஷா தனியார் நிறுவனமாக பதிவாகியுள்ளது. தொடர்ந்து மாநில அளவில் தக்‌ஷா குழு ட்ரோன் தயாரிப்பில் பெரிய அளவில் பங்களிப்பை அளித்து வருகிறது. இந்த நிலையில் "மேக் இன் இந்திய திட்டத்தின்" கீழ் மத்திய பயணிகள் விமான சேவை துறை சார்பாக ஆளில்லா விமானம் தயாரிப்பதற்கு சென்னை-யில் தக்‌ஷா குழு தேர்வாகியுள்ளது. 

Latest Videos

இதோடு ஆளில்லா விமானம் பாகங்கள் தயாரிப்பதற்கு சென்னை-யை சேர்ந்த Zuppa Geo Navigation Technologies என்ற நிறுவனமும் தேர்வாகியுள்ளது. ஆளில்லா விமானம் தயாரிப்புக்கு இந்திய முழுவதிலும் இருந்து மொத்தம் 5 நிறுவனமும், ஆளில்லா விமானம் உதிரி பாகங்கள் தயாரிப்புக்கு 9 நிறுவனங்களும் தேர்வாகியுள்ளது. அண்ணா தொழில் நுட்ப கல்லூரி இந்திய அளவில் மிக பெரிய கல்லூரி. அதோடு, உலக தரம் வாய்ந்த கல்லூரியும் கூட.

உலக அளவில் இந்த கல்லூரிக்கு மிகப்பெரிய பெயர் உள்ள ஒரு கல்லூரி, இதில் பல விதமான பொறியியல் பாடங்கள் உள்ளது. அதிலும் குறிப்பாக விமான பிரிவும் உண்டு இந்த பிரிவுக்கு தக்ஸ்ஷா என்று பெயர் பிரிவில் செயல்படுகிறது. நடிகர் அஜித் விமானம் ஓட்டுபத்தில் மிகவும் திறமையானவர். இதனால் இவரை இந்த கல்லூரி தொழில் ஆலோசராக நியமித்துள்ளது. இதன் கீழ் இந்த கல்லூரி விமான பிரிவு மாணவர்களுக்குகு நடிகர் அஜித் அடிக்கடி பயிற்சி மற்றும் ஆலோசனைகள் வழங்குவார் .

இந்த மாணவர்கள் இந்திய அளவில் மிக பெரிய சாதனைகள் புரிந்து உள்ளனர். இந்திய அளவில் நடந்த போட்டியில் தக்‌ஷா அதாவது அஜித் கீழ் பயிற்சி பெறும் மாணவர்கள் முதல் மூன்று பரிசுகளை பெற்று சாதனை புரிந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது பழைய செய்தி என்றாலும், அண்ணா பல்கலைக்கழகத்தின் தக்‌ஷா ஆளில்லா விமானம் குழு மத்திய அரசுக்கு ட்ரோன்-களை தயாரித்து கொடுப்பதற்கு தேர்வாகியுள்ளது என்பதே புதிய செய்தி.

10ம் வகுப்போடு படிப்பில் நின்றுவிட்டு, தற்போது இவர் ஆலோசனையில் இயங்கிய குழு ஒன்று பல்வேறு சாதனைகளை படைத்திருப்பது எவ்வளவு பெரிய சாதனை. இது மட்டுமல்லாமல், தற்போது நம் மத்திய அரசுக்கு ட்ரோன்களை தயாரித்து கொடுப்பதற்கு இந்த குழு தேர்வாகியுள்ளது என்பது எவ்வளவு பெரிய சாதனை. மொத்தத்தில் நடிகர் அஜித் வெறும் நடிகர் மட்டுமல்ல என்பதனை இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம். இந்த செய்தியினை அறிந்த அஜித் ரசிகர்கள், கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படிங்க : தனுஷ்கோடி வர 2.5 லட்சம் செலவு.. இலங்கையில் இருந்து 2 குழந்தைகளுடன் வந்த இளம்பெண் தகவல் !!

click me!