
பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் தனது 2-வது மனைவி கிரண் ராவை விவாகரத்து செய்து கொண்டதாக அறிவித்துள்ளார். 16 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பின் பிரிவதாக அமீர்கானும்-கிரண் ராவும் கூட்டாக அறிவித்துள்ளனர்.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது, “இந்த 15 அழகான ஆண்டுகளில் நாங்கள் வாழ்நாள் முழுவதும் பெற்ற அனுபவங்கள் மகத்தானவை. மகிழ்ச்சியும் சிரிப்பும் கூடிய நிறைவைப் பகிர்ந்து கொண்டோம், எங்கள் தாம்பத்திய வாழ்க்கையானது ஒருவர் மீது மற்றொருவர் கொண்டிருந்த நம்பிக்கை, மரியாதை மற்றும் அன்பால் மட்டுமே நிறைந்துள்ளது. இப்போது நாங்கள் எங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்க விரும்புகிறோம் - இனி கணவன்-மனைவியாக அல்ல, ஆனால் ஒருவருக்கொருவர் இணை பெற்றோராக எங்கள் மகனுக்கான எல்லா கடமைகளிலும் இணைந்திருப்போம்.”என்று அமீர்கான் மற்றும் கிரண் ராவ் இருவரும் தெரிவித்துள்ளனர்.
அமீரும் கிரணும் மேலும் அந்த அறிக்கையில்: “நாங்கள் சில காலத்திற்கு முன்பு வெறுமை மற்றும் பிரிவை உணர்ந்தோம். இப்போது இந்த விவாகரத்து ஏற்பாட்டை முறைப்படுத்திக் கொள்வதை சட்டத்தின் வழியான வசதியாக உணர்கிறோம், தனித்தனியாக வாழ்வது, ஆனால் எங்கள் அன்பு மகனுக்கான குடும்பம் செய்ய வேண்டிய கடமைகளைப் பகிர்ந்து கொள்வது என்பதில் தெளிவாக இருக்கிறோம். அந்த அடிப்படையில் மகன் ஆசாத்துக்கு அர்ப்பணிப்புள்ள பெற்றோர்களாக நாங்கள் இருக்கிறோம்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.