பாஜகவில் இணைகிறாரா நடிகர் அர்ஜுன்?... மாநில தலைவர் எல்.முருகன் உடன் திடீர் சந்திப்பு...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Mar 09, 2021, 11:58 AM IST
பாஜகவில் இணைகிறாரா நடிகர் அர்ஜுன்?... மாநில தலைவர் எல்.முருகன் உடன் திடீர் சந்திப்பு...!

சுருக்கம்

இந்நிலையில் பிரபல நடிகர் ஒருவரும் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. தற்போது அவர் தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை சந்தித்திருப்பது கூடுதல் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.   

கடந்த சில மாதங்களாகவே நாடு முழுவதும் உள்ள திரைப்பிரபலங்கள் பலரும் பாஜகவில் தங்களை இணைத்துக்கொள்கின்றனர். பிரதமர் மோடியின் திட்டம் மற்றும் செயல்பாடுகளால் கவரப்பட்டு பாஜகவில் இணைவதாக தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் நடிகை குஷ்புவைத் தொடர்ந்து பல நடிகர்கள் பாஜகவில் இணைந்து வருகின்றனர். சமீபத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகனும், பிரபல தயாரிப்பாளருமான ராம்குமார் பாஜகவில் இணைந்தார். 

அதனைத் தொடர்ந்து நடன இயக்குநர் கலா கட்சியில் இணைந்தார். இந்நிலையில் பிரபல நடிகர் ஒருவரும் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. தற்போது அவர் தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை சந்தித்திருப்பது கூடுதல் சந்தேகத்தை கிளப்பியுள்ளது. 

தமிழ், தெலுங்கு, கன்னட படத்தில் பிரபல நடிகராக வலம் வருபவர் அர்ஜுன். சென்னை கெரும்பாக்கத்தில் பிரம்மாண்ட அனுமார் கோயில் ஒன்றை கட்டி வருகிறார். கடந்த டிசம்பர் மாதம் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் சென்னையில் நடிகர் அர்ஜுனை சந்தித்தார். கோவில் கட்டும் பணிகளை பார்வையிட்ட எல்.முருகன், அர்ஜுன் பாஜகவில் இணைய வேண்டுமென கோரிக்கை விடுத்ததாக தகவல்கள் வெளியாகின. 

இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும், விரைவில் தேசிய கட்சி தலைவர் ஒருவர் முன்னிலையில் அர்ஜுன் கட்சியில் இணைய உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகின. இன்று மரியாதை நிமித்தமாக நடிகர் அர்ஜுன்  மத்திய உள்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி மற்றும் தமிழக பாஜக எல்.முருகனை சந்தித்துள்ளார். எனவே சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக அர்ஜுன் பாஜகவில் இணைவார் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!
2025-ஆம் ஆண்டு லோ பட்ஜெட்டில் உருவாகி... மிகப்பெரிய வசூலை வாரி சுருட்டிய டாப் 5 படங்கள்!