
நடிகை பாவனா பலாத்கார விவகாரத்தில் தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளியான பல்சர் சுனி, விக்கீஸ் ஆகியோர் எர்ணாகுளம்மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று சரணடைய வந்த போது அவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
பலாத்காரம்
நடிகை பவானா கடந்தவாரம் வெள்ளிக்கிழமை கொச்சியில் படப்படிப்பு முடிந்து, திருச்சூருக்கு காரில் திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது அவரை வேனில் பின்தொடர்ந்த 4 பேர், அவர் கார் மீது மோதி தடுத்து நிறுத்தினர். அதன்பின், காருக்குள் அந்த 4 பேரும் ஏறி ஏறக்குறைய 2 மணிநேரம் காரை ஓட்டிச் சென்று, பாவனாவை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து, அதை வீடியோவாகவும், புகைப்படமாகவும் எடுத்தனர்.
அதிர்வலை
இது தொடர்பாக பாவனா கொச்சி போலீசில் புகார் செய்ததையடுத்து, நடிகை பாவனாவின் கார் டிரைவர் மார்டின் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில், வி.பி.விகீஸ் ஆகியோரை போலீசார் தேடி வந்தனர். இந்த விவகாரம் மாநிலத்தில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.
சரண்?
இந்நிலையில், கடந்த ஒருவாரமாக தேடப்பட்டு வந்த பல்சர் சுனி, விக்கீஸ் ஆகியோர் நேற்று எர்ணாகுளம் ஜூடியல் மாஜிஸ்திரேட்நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைய வந்தனர்.
கைது
அப்போது, இவர்கள் வந்த நேரத்தில் நீதிபதி மதிய உணவுக்கு சென்று இருந்தார். இந்த நேரத்தைப் பயன்படுத்திய போலீசார், அவர்களை சரண் அடையவிடாமல் கைது செய்தனர். இதனால், போலீசாருக்கும், சுனி, விக்கீஸ் தரப்பு வழக்கறிஞர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இறுதியில் போலீசார் அவர்களை கைது செய்தனர்.
தள்ளுமுள்ளு
இது குறித்து பல்சர் சுனி, விக்கீஸ் வழக்கறிஞர்கள் கூறுகையில், “ இவர்கள் இருவரும் கொலைக்குற்றம் அல்லது பாலியல் குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளிகளாக இருக்கலாம். நீதிமன்றத்தைப் பொருத்தவரை தீர்ப்பு வரும் வரை இருவரும் குற்றம்சாட்டப்பட்டவர்கள். சரண் அடைய வந்த இருவரையும் போலீசார் வலுக்கட்டாயமாக படித்து கைது செய்தது சட்டவிரோதம். நீதிமன்றத்தில் இருந்து ஒரு குற்றம்சாட்டப்பட்டவரை கைது செய்ய போலீசாருக்கு உரிமையில்லை'' என்றனர்.
திலீபுக்கு தொடர்பா?
இந்த விவகாரத்தில் நடிகர் திலீப்புக்கும், பவானாவுக்கும் இடையிலான முன்விரோதம் காரணமாக, கூலிப்படை மூலம் இந்த செயலை திலீப் நடத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், முக்கியக்குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு இருப்பதன் மூலம், விசாரணையில் அனைத்து சந்தேகங்களுக்கும் விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.