
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் பரபரப்புக்கும், சர்ச்சைக்கும் பஞ்சமிருக்காது. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் 50 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் போடியாளர்களாக பங்கேற்றுள்ள அபிநய்யும், பாவனியும் காதலிப்பதாக சர்ச்சை எழுந்தது.
அபிநய்க்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது. அதேபோல் பாவனியும் திருமணமாகி கணவரை இழந்துள்ளார். இவர்கள் இருவரும் பிக்பாஸ் வீட்டில் நெருங்கி பழகுவதை பார்த்த சக போட்டியாளரான ராஜு, அபிநய்யிடம் நீங்க பாவனிய லவ் பண்றீங்களா? என நேரடியாகவே கேட்டார்.
ராஜுவிடம் இருந்து இந்த கேள்வியை சற்றும் எதிர்பாராத அபிநய், என்ன சொல்வது என்று தெரியாமல் சற்று திகைத்துப்போனார். பின்னர் இல்லை என்று கூறினார். இந்த எபிசோடு ஒளிபரப்பானதை அடுத்து இந்த விஷயம் பூதாகரமானது.
இந்நிலையில், அபிநய்யின் மனைவி அபர்ணா இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “நீ எப்படிபட்ட நபர் என்பது எனக்கு தெரியும். என்னைவிட உன்னை பற்றி யாருக்கும் தெரியாது. எப்போதும் உன்னை காதலிப்பேன். லவ் யூ” என்று பதிவிட்டு இருக்கிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.