Aamir Khan Daughter Marriage : இதுவரை நேரடியாக எந்த ஒரு தமிழ் திரைப்படத்திலும் நடிக்கவில்லை என்றாலும், தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை கொண்ட ஒரு நடிகர் தான் அமீர் கான். இந்நிலையில் நேற்று ஜனவரி 3ஆம் தேதி அவருடைய மகளின் திருமணம் வித்யாசமான முரையில் நடந்துள்ளது.
நேற்று ஜனவரி 3 ஆம் தேதி மும்பையில் ஈரா கான் மற்றும் நூபுர் ஷிகாரே ஆகிய இருவரும் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். ஈரா கான், நடிகர் அமீர் கான் மற்றும் அவரது முன்னாள் மனைவி ரீனா தாத்தாவின் மகள் ஆவார். நேற்று எளிய முறையில், மிகவும் வித்தியாசமாக அவர்களுடைய திருமணம் நடந்தது.
ஈரா கானை திருமணம் செய்துகொண்ட நூபுர் ஒரு உடற்பயிற்சி மாஸ்டர், ஆகவே சுமார் 8 கிலோமீட்டர் ஜாகிங் முடித்த கையேடு, அதே முண்டா பனியன் மற்றும் அரைக்கால் டவுசரோடு அவர் திருமணத்திற்கு வந்தார். இந்நிலையில் மாப்பிள்ளையின் இந்த திருமண டிரஸ் மற்றும் அவர் ஆடிய நடனங்கள் இப்பொது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.
ஜோடிகள் இருவரும் தங்கள் குடும்பத்தினர் முன்னிலையில் தங்கள் திருமணத்தை பதிவு செய்துகொண்டனர். அமீர் கான் மற்றும் அவரது முன்னாள் மனைவிகள் ரீனா தத்தா மற்றும் கிரண் ராவ் ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர். ஆமிர் கானின் மகள் ஈரா அழகான லெஹெங்காவில் அழகாகத் தெரிந்தாலும், அதே ட்ரவுசர் மற்றும் பனியனில் தான் நூபுர் காணப்படுகிறார்
Aamir Khan's would be son-in-law sits on the dhol 🥁 pic.twitter.com/k1OMFNczog
— BollyHungama (@Bollyhungama)சிறிது நேரத்திற்குப் பிறகு, பல நெட்டிசன்கள் அவர்களின் திருமண வீடியோவுக்கு மணமகனின் உடை குறித்து கேள்விகளை எழுப்பத் தொடங்கினர். பலரும் மணமகனின் இந்த வினோத கல்யாணம் ஆடை குறித்து தான் பெரிதும் பேசினார்.