- Home
- Gallery
- உச்சகட்ட பரபரப்பில் பிக் பாஸ்.. இன்று நடைபெற்ற Money Task - 16 லட்சத்துடன் வெளியேறிய யங் நாயகி? உண்மையா?
உச்சகட்ட பரபரப்பில் பிக் பாஸ்.. இன்று நடைபெற்ற Money Task - 16 லட்சத்துடன் வெளியேறிய யங் நாயகி? உண்மையா?
Bigg Boss Money Task : பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் 90 நாட்களை கடந்து நடந்து வருகின்றது. வெற்றியாளர் யார் என்ற அறிவிப்பு விரைவில் தெரியப்போகிறது என்ற ஆவலில் உள்ளனர் ரசிகர்கள்.

Bigg Boss Season 7 Contestants
உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்று கூறினால் அது மிகையல்ல. அதிலும் குறிப்பாக இதற்கு முன்னதாக ஒளிபரப்பப்பட்ட ஆறு சீசர்களை விட இந்த ஏழாவது சீசன் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
Raveena Evicted
துவக்கம் முதலிலேயே பல அதிரடியான திருப்பங்களோடு இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கடந்த வார எலிமினேஷனில் நிக்சன் மற்றும் ரவீனா ஆகிய இருவரும் வெளியேற்றப்பட்டது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை தான் ஏற்படுத்தி உள்ளது என்றே கூறலாம். போங்கு ஆட்டம் ஆடுகிறார் பிக் பாஸ் என்றெல்லாம் மீம்ஸ் பறக்கிறது.
Veteran Actress Vichitra
இந்நிலையில் 90 நாட்களைக் கடந்து பிக் பாஸ் நிகழ்ச்சி நடந்து வரும் நிலையில் "மணி டாஸ்க்" ஒன்றை பிக் பாஸ் அறிமுகம் செய்தார். 5 லட்சம் ரூபாய் ரொக்க தொகை வைக்கப்பட்ட நிலையில் அந்த தொகை கூடவும் செய்யலாம்? குறையவும் செய்யலாம்? என்ற ஒரு தகவலையும் பிக் பாஸ் தெரிவித்து இருந்தார். முன்னதாக சுமார் 13 லட்சம் ரூபாய் பணத்துடன் மூத்த நடிகை விசித்ரா அவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதாக தகவல்கள் வெளியானது.
Poornima Ravi
ஆனால் இப்பொழுது, இன்று நடைபெற்ற நிகழ்வில் சுமார் 16 லட்சம் வரை அந்த "மணி டாஸ்க்" சென்றதாகவும், இறுதி நேரத்தில் பிரபல போட்டியாளர் பூர்ணிமா அவர்கள் அந்த 16 லட்சத்தோடு பிக் பாஸ் போட்டியில் இருந்து வெளியேறியதாக இப்பொழுது சில தகவல்கள் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.