விஜய் மீது செருப்பு வீச்சு... உடனடியா ஆக்‌ஷன் எடுங்க - கோயம்பேடு காவல்நிலையத்துக்கு பறந்த புகார்

By Ganesh A  |  First Published Jan 4, 2024, 3:42 PM IST

விஜயகாந்திற்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்தபோது விஜய் மீது செருப்பு வீசியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.


நடிகர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28-ந் தேதி மரணமடைந்த நிலையில், அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அன்று இரவே சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்துக்கு சென்றிருந்தார் விஜய். அப்போது கேப்டனின் உடலை பார்த்து விஜய் கண்கலங்கி நின்றது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. விஜய் அங்கு வந்தபோது அதிகளவில் கூட்ட நெரிசலும் ஏற்பட்டது.

இதன் காரணமாக விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு உடனடியாக அங்கிருந்து கிளம்பினார் விஜய். அப்போது அங்கு குழுமி இருந்த விஜயகாந்தின் ரசிகர்கள் விஜய்யை பார்த்து வெளியே போ என கோஷமிட்டனர். அதுமட்டுமின்றி கூட்ட நெரிசலில் சிக்கிய நடிகர் விஜய் மீது காலணியும் வீசப்பட்டது. இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்... Video: துபாயிலும் விடாமல் துரத்தி வீடியோ எடுத்த ரசிகர்கள்.. கோபத்தில் டக்குனு போனை பிடுங்கி டெலிட் செய்த அஜித்

இந்த நிலையில், விஜய் மீது காலணி வீசப்பட்டது தொடர்பாக நடவடிக்கை எடுக்ககோரி தென் சென்னை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அந்த புகாரில், கடந்த 28/12/ 2023. அன்று நடிகர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இறப்பிற்கு துக்கம் விசாரிப்பதற்காக இரவு சுமார் 10:30 மணி அளவில் தளபதி விஜய் அவர்கள், சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் திருமண மண்டபத்திற்கு வருகை தந்திருந்தார்.

அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் காலணியை கழற்றி தளபதியை நோக்கி எரிந்துள்ளார், இதனால் தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த தளபதி விஜய் அவர்களின் ரசிகர்கள், அவர்களின் சொந்தங்கள், மற்றும் அவர் மீது பாசத்தை வைத்துள்ள ஒட்டுமொத்த மக்களின் மனதை புண்படுத்தும் வகையிலும் அருவருக்கத்தக்க இம்மாதிரியான செயலில் ஈடுபட்ட, அந்த நபரை கண்டுபிடித்து அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கும் படியும் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” என அந்த புகார் மனுவில் குறிப்பிட்டு உள்ளனர்.

இதையும் படியுங்கள்... செல்பி பாட்டி போட்ட பிளான்.. வேலை செய்ததா வயகரா மாத்திரை? - கார்த்திகை தீபம் சீரியலில் செம்ம டுவிஸ்ட்

click me!