
Aamir Khan team up With Lokesh Kanagaraj : பாலிவுட் நடிகர் அமீர் கானுக்கு சமீப காலங்களாக பெரியளவில் வெற்றிப் படங்கள் இல்லாவிட்டாலும், அவரது மார்க்கெட் குறையவில்லை. அவர் நடிக்கவிருக்கும் புதிய படங்கள் குறித்த செய்திகள் எப்போதும் முக்கியத்துவம் பெறுகின்றன. அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. தற்போது, அவர் நடிக்கும் ஒரு சூப்பர் ஹீரோ படம் குறித்த தகவலும், அதன் இயக்குநர் குறித்த தகவலும் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அமீர் கானை வைத்து ஒரு சூப்பர் ஹீரோ படம் இயக்க உள்ளாராம். இதுகுறித்து சமீபத்தில் நடிகர் அமீர்கான் அளித்த பேட்டியில், இந்த தகவலை உறுதிப்படுத்தினார். லோகேஷும் நானும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற உள்ளோம். அது ஒரு சூப்பர் ஹீரோ படம். பிரம்மாண்டமான ஆக்ஷன் படமாக அது உருவாகும். அடுத்த ஆண்டு இரண்டாம் பாதியில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அமீர்கான் தெரிவித்தார். சூர்யா நடிப்பதாக இருந்த இரும்புக்கை மாயாவி படத்தை தான் அமீர்கானை வைத்து லோகேஷ் எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.
ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் வெளியான பி.கே. படத்தின் இரண்டாம் பாகம் குறித்த செய்திகளையும் அவர் மறுத்தார். ராஜ்குமார் ஹிரானியுடன் அடுத்து இணையும் படம், இந்திய சினிமாவின் தந்தை தாதாசாகேப் பால்கேவின் வாழ்க்கை வரலாற்றுப் படம் என்றும் அவர் கூறினார். பி.கே. 2 என்பது வெறும் வதந்தி. தாதாசாகேப் பால்கேவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் தான் நாங்கள் பணியாற்றி வருகிறோம். நானும் ராஜ்குமார் ஹிரானியும் இதற்காக இணைந்து பணியாற்றி வருகிறோம் என்று அமீர் கான் கூறினார்.
நீண்ட காலமாக தன் கனவு திரைப்படமாக உள்ள மகாபாரதப் படம் குறித்தும் அவர் பேசினார். மகாபாரதம் கடந்த 25 வருடங்களாக என் கனவு புராஜெக்ட். அது வெறும் படம் அல்ல. நீங்கள் மகாபாரதத்தை உருவாக்கும் போது, நீங்கள் ஒரு படத்தை உருவாக்குவதில்லை, மாறாக உங்களை நீங்களே அர்ப்பணிக்கிறீர்கள். நான் முயற்சி செய்கிறேன். ஆனால் அந்தக் கனவு நனவாகுமா என்று எனக்குத் தெரியவில்லை என்றார் அமீர் கான். இதற்கிடையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படத்திலும் நடிகர் அமீர் கான் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.