Aamir Khan Next Movie : பாலிவுட் திரையுலகில் சூப்பர்ஸ்டாராக வலம் வரும் அமீர்கான், அடுத்ததாக விஜய் பட இயக்குனருடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமீர் கான்
பாலிவுட் திரையுலகில் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் அமீர் கான். இவர் நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு லால் சிங் சத்தா என்கிற திரைப்படம் ரிலீஸ் ஆனது. பாரஸ்ட் கோம்ப் என்கிற ஹாலிவுட் படத்தின் ரீமேக்கான இதில் அமீர் கான் உடன் நாக சைதன்யாவும் நடித்திருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இப்படம் படுதோல்வியை சந்தித்தது. அப்படத்தின் தோல்விக்கு பின்னர் சினிமாவை விட்டே விலக முடிவெடுத்த அமீர்கான் எந்த படத்திலும் நடிக்காமல் இருந்து வந்தார்.
undefined
தயாரிப்பில் பிசி
படங்களில் நடிக்காவிட்டாலும் அவர் தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் வித்தியாசமான படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறார். அந்த வகையில் அவர் தயாரிப்பில் இந்த ஆண்டு ரிலீஸ் ஆன லாபட்டா லேடீஸ் திரைப்படம் தேசிய விருதுகளை வென்று அசத்தியதோடு, இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கும் நாமினேட் செய்யப்பட்டது. லாபட்டா லேடீஸ் படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தை இந்தியில் ரீமேக் செய்ய முடிவெடுத்து அதற்கான உரிமத்தையும் வாங்கி வைத்திருக்கிறார் அமீர் கான்.
இதையும் படியுங்கள்... 250 கோடியில் உருவான ஷாருக்கான் பட வசூலை 5 கோடியில் படமெடுத்து அசால்டா அடிச்சுதூக்கிய அமீர்கான்!
வம்சி உடன் அடுத்த படம்
இந்த நிலையில், நடிகர் அமீர் கான், இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பின்னர் சினிமாவில் மீண்டு எண்ட்ரி கொடுக்க உள்ளதாகவும், அவரின் கம்பேக் திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர் கடைசியாக தமிழில் விஜய்யை வைத்து வாரிசு என்கிற திரைப்படத்தை இயக்கி இருந்தார். அப்படம் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றிபெற்றது.
அமீர்கான் படத்தை தயாரிக்கும் தில் ராஜு
மேலும் வம்சி இயக்கத்தில் அமீர்கான் நடிக்க உள்ள படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க உள்ளதாகவும் இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தை பான் இந்தியா படமாக எடுக்கும் முடிவில் இருக்கிறாராம் வம்சி. ஏற்கனவே இந்தியில் தில் ராஜு தயாரித்த ஜெர்சி மற்றும் ஹிட் ஆகிய படங்கள் படுதோல்வியை சந்தித்த நிலையில், அமீர் கான் படம் மூலம் பாலிவுட்டில் அவர் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அமீர் கான் ரஜினிகாந்தின் கூலி படத்தில் கேமியோ ரோலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... 'கூலி' படத்தில் ரஜினிகாந்துடன் இணையும் பாலிவுட் சூப்பர் ஸ்டார்!