கடைசி வரைக்கும் அது அவனுக்கு புரியவே இல்லை..! ஆஜித் பற்றி கவலைப்பட்ட அவரது அம்மா..!

Published : Dec 31, 2020, 01:49 PM IST
கடைசி வரைக்கும் அது அவனுக்கு புரியவே இல்லை..! ஆஜித் பற்றி கவலைப்பட்ட அவரது அம்மா..!

சுருக்கம்

ஆஜித்தின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டுக்கு வருகை தருகிறார்கள். இது நாள் வரை நான் நல்லா தான் விளையாடி வருகிறேன் என்று நம்பிக்கொண்டிருந்த நம்பிக்கையை உடைப்பது போல், அவரது குடும்பத்தினர் ஆஜித் இதுவரை பேசியதே இல்லை என்பதை புரிய வைக்கிறார்கள்.

பிக்பாஸ் வீட்டின் உள்ளே உள்ள போட்டியாளர்கள் ஆரியை எதிரியாக பார்த்தாலும், வெளியே உள்ள அவரது ரசிகர்கள் அவரை ஹீரோவாக பார்த்து வருகிறார்கள். மேலும் உள்ளே வரும் அனைத்து போட்டியாளர்களின் குடும்பத்தினரும் கூட ஆரி மீது தனி மதிப்பு வைத்திருப்பது அவர்களது பேச்சில் இருந்தே தெரியவருகிறது.

அந்த வகையில் ஷிவானியின் அம்மா, ரம்யாவின் சகோதரர், என உள்ளே வந்தவர்கள் ஆரி மீது தங்களுக்கு இருந்த மதிப்பையும் மரியாதையையும் காட்டினர். ஆரியும் போட்டியாளர்கள் தன்னை பற்றி பின்னல் சென்று புறணி பேசினாலும் அதனை சற்றும் கண்டு கொள்ளாமல், அனைத்து போட்டியாளர்களின் உறவினர்களையும் சிரித்து உபசரித்து வருகிறார்.

இன்றைய முதல் புரோமோவில், கேப்ரில்லாவின் அம்மா வீட்டுக்குள் வந்த நிலையில், அவரை தொடர்ந்து தற்போது... ஆஜித்தின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டுக்கு வருகை தருகிறார்கள். இது நாள் வரை நான் நல்லா தான் விளையாடி வருகிறேன் என்று நம்பிக்கொண்டிருந்த நம்பிக்கையை உடைப்பது போல், அவரது குடும்பத்தினர் ஆஜித் இதுவரை பேசியதே இல்லை என்பதை புரிய வைக்கிறார்கள்.

மேலும் அவனை பற்றிய விமர்சனங்களை கூறும் போது அதனை இன்னும் தெளிவாக கூறவில்லையே என்று தோன்றியதாக ஆஜித் குடும்பத்தினர் கூற அதற்க்கு ஆரி... அதனை எடுத்து சொன்னால் அட்வைஸ் செய்கிறேன் என வாயை அடைத்து விட்டதாக தெரிவிக்கிறார்.

ஆரி ஆஜித்தை முன்னிறுத்தி விளையாட கூறி அசிங்கப்பட்டதை அறிந்த அவரது அம்மாவும், கடைசி வரை ஆஜித் அதனை புரிந்து கொள்ளவே இல்லை என கவலைப்படுகிறார். இனியாவது ஆஜித் தான் இன்னும் முன்னால் வந்து விளையாடவில்லை என்பதை உணர்வாரா என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

இதுகுறித்த புரோமோ இதோ...

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Pandian Stores 2 ட்வீஸ்ட்: "என் பொண்ண மறந்துடாதீங்க மாப்ளே..!" சரவணனுக்கு நேரடியாக தூதுவிட்ட தங்க மயிலின் அப்பா!
Super Singer Winner: இசை உலகை ஆளப்போகும் அந்த குரல்! இன்று வெளிச்சத்திற்கு வரும் சூப்பர் சிங்கர் வின்னர்!