#Aadhaar movie; திரைக்கு தயாராகி வரும் கருணாஸ் படம் ; அரசு மருத்துவமனை உண்மை சம்பவம் சார்ந்த ஆதார்...

Kanmani P   | Asianet News
Published : Nov 11, 2021, 04:40 PM ISTUpdated : Nov 11, 2021, 04:43 PM IST
#Aadhaar movie; திரைக்கு தயாராகி வரும் கருணாஸ் படம் ; அரசு மருத்துவமனை உண்மை சம்பவம் சார்ந்த ஆதார்...

சுருக்கம்

சென்னையில் மட்டுமே முழு கதையையும் படமாக்கியுள்ள ஆதார் படக்குழுவினர் அடுத்த ஆண்டு துவக்கத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

பாலா இயக்கத்தில் வெளியான நந்தா படத்தில் நடித்தான் மூலம் திரைக்கு அறிமுகமான கருணாஸ்.  இந்த படத்தை தொடர்ந்து துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த கருணாஸ் திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி உள்ளிட்ட படங்கள் மூலம் கதாநாயகனாகவும் உருவெடுத்தார். பின்னர் முக்குலத்தோர் புலிப்படை ஏன்னு  கட்சியை ஆரம்பித்து அப்போது நடந்த தேர்தலில் திருவாடானை தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 

ஆனால் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் போட்டியிடாத கருணாஸ் மீண்டும் சினிமா பக்கம் திரும்பியுள்ளார். அவர் இப்போது  அடுத்த படமான ஆதார் படப்பிடிப்பை தொடங்கினார். இப்படத்தில் பிக்பாஸ் புகழ் ரித்விகா கதாநாயகியாக நடிக்கிறார். அரசு மருத்துவமனையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் அருண்பாண்டியன், வத்திக்குச்சி திலீப், பாகுபலி புகழ் பிரபாகர், மனிஷா யாதவ் ஆகியோர் நடித்துள்ளனர்.

அம்பாசமுத்திரம் அம்பானி, திருநாள் ஆகிய படங்களை இயக்கிய ராஜ்நாத் இயக்குகிறார்.அழகம்மை மகன் தயாரிக்கும் இப்படத்தை வெனிலா கிரியேஷன்ஸ் சார்பில் சசிகுமார் தயாரிக்கிறார். படப்பிடிவு முழுவதையும்  சென்னையிலேயே முடித்துள்ள இந்த படக்குழு அடுத்தாண்டு ஜனவரியில் திரையிட படத்தை தயாரித்து வருவதாக சொல்லப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!