
மேயாத மான், ஆடை ஆகிய படங்களை இயக்கியவர் ரத்னகுமார். நண்பர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்திற்காக ஓடி, ஓடி உழைத்தது இவர் தான். சமீபத்தில் மாஸ்டர் படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது ரத்னகுமாரை பார்த்த பலரும் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.
ஆம், மாஸ்டர் படத்திற்கு பூஜை போடும் போது ரத்னகுமாரின் உடல் எடை 97 கிலோ. டெல்லி, சென்னை, கர்நாடகா, நெய்வேலி என மாறி, மாறி நடந்த மாஸ்டர் பட ஷூட்டிங்கில் ஓயாமல் வேலை செய்து தற்போது 79 கிலோவிற்கு வந்துவிட்டார்.
இதையும் படிங்க: அரைகுறை உடையில்... நடுரோட்டில் நின்று முத்தம்... அமலா பாலின் அடுத்த அட்ராசிட்டி...!
இவ்வளவு குறுகிய காலத்தில் தான் எப்படி உடல் எடையை குறைத்த மகிழ்ச்சியில் மாஸ்டர் பட பூஜை மற்றும் ஆடியோ லான்சின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.அந்த பதிவில் இதற்கு இன்ஸ்பயராக இருந்த விஜே ரம்யாவுக்க் நன்றி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அஜித், சிம்புவை தொடர்ந்து ஜோதிகாவிற்கும் சிக்கல்... விடாமல் துரத்தும் கொரோனா வைரஸ்...!
அந்த பதிவிற்கு கமெண்ட் செய்துள்ள விஜே ரம்யாவோ... இவ்வளவு சீக்கிரம் எப்படி இவ்வளவு வெயிட் குறைஞ்சிங்க. உங்கள பார்த்தால் ரொம்ப பொறாமையா இருக்கு என்று பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலருக்கு தலை சுற்றியிருக்கும். எது எப்படியோ நல்லது நடந்தால் சரி...!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.