வெறும் 45 ஆயிரம் ரூபாயில் எடுக்கப்பட்ட முழு நீள தமிழ்த் திரைப்படம்...நம்பித்தாங்க ஆகணும்...

By Muthurama LingamFirst Published Sep 10, 2019, 12:30 PM IST
Highlights

இன்றைய தேதியில் படங்களின் பட்ஜெட் 400,500 கோடிகளைத் தொட்டுக்கொண்டிருக்கும் நிலையில் வெறும் 45 ஆயிரம் ரூபாய் செலவில் 1 மணி நேரம் 40 நிமிடங்கள் ஓடக்கூடிய தமிழ்ப் படத்தை ஒரு இளைஞர் இயக்கியிருக்கிறார் என்றால் நம்புவதற்குக் கஷ்டமாக இருக்கிறது அல்லவா? ஆனாலும் நடந்தது நிஜம்.
 

இன்றைய தேதியில் படங்களின் பட்ஜெட் 400,500 கோடிகளைத் தொட்டுக்கொண்டிருக்கும் நிலையில் வெறும் 45 ஆயிரம் ரூபாய் செலவில் 1 மணி நேரம் 40 நிமிடங்கள் ஓடக்கூடிய தமிழ்ப் படத்தை ஒரு இளைஞர் இயக்கியிருக்கிறார் என்றால் நம்புவதற்குக் கஷ்டமாக இருக்கிறது அல்லவா? ஆனாலும் நடந்தது நிஜம்.

முழுக்க முழுக்க புதுமுகங்களைக் கொண்டு ரத்தினக் குமார் எனும் புதுமுக இயக்குனர் எழுதி, இயக்கி, ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் செய்து தயாரித்துள்ள  திரைப்படம் "Surveillance Zone". இந்த திரைப்படம் 1மணி நேரம்  40 நிமிடங்கள்  நீளம் கொண்ட வெறுமனே  ₹45,000 ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட சுயாதீன  தமிழ்ப் படம். இந்தப் படம் Canon 550D மற்றும் Gopro-கேமராவில் எடுக்கப்பட்டது.

தற்போது ஆகஸ்ட் 16ம் தேதி டொரண்டோவில் நடந்த  சர்வதேச ந்திய திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டது. இது வரை இத்தாலி,பெர்லின், இஸ்ரேல்,மியாமி, கொல்கத்தா போன்ற ஊர்களில் நடத்தப்பட்ட சர்வ தேச திரைப்பட விழாக்களில் இந்த  படம் தேர்ந்தெடுக்கப்பட்டு நல்ல வரவேற்புகளும் கிடைத்துள்ளது. டில்லி யில் நடத்தப்பட்ட Dadasaheb Phalke International Film Festival லும் இப்படத்துக்கு  விருதுகிடைத்துள்ளது.

ஒரு கதையை CCTV Footage மூலம் சொன்னால் எப்படி இருக்குமோ அதே போல் தான் Surveillance Zone படமும் இருக்கும். படத்தில் இசை இல்லை. CCTVஇல் பதிவு செய்த ஆடியோ எப்படி கேட்குமோ அதே போல் தான் ஒலி அமைப்பும் அமைக்கப்பட்டிருக்கிறது. சில இடங்களில் ஆடியோ இருக்காது.ஒரு பரிசோதனை முயற்சியாக எடுக்கப்பட்ட இந்த படத்தில் இஃபால், குணா, ரகுராம் இரவிச்சந்திரன் ஆகியோர் சவுண்ட் டிசைன் செய்துள்ளனர். 

click me!