ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இரண்டாவது சிங்கிள் உயிர் உருகுதே பாடலின் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
சீயான் விக்ரமின் வரவிருக்கும் கோப்ரா படத்தை கோப்ரா 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது. அஜய் ஞானமுத்து எழுதி இயக்கும் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான இப்படத்தில் விக்ரமுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
முதலில் பிரியா பவானி சங்கர் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு பின்னர் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி நாயகியாக உறுதியானார். இவர்களுடன் இர்பான் பதான் , மியா ஜார்ஜ் , ரோஷன் மேத்யூ , சர்ஜனோ காலித் , பத்மப்ரியா , முகமது அலி பெய்க் , கனிஹா , மிர்னாலினி ரவி , மீனாட்சி, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
மேலும் செய்திகளுக்கு... கையில் சரக்கு பாட்டலுடன் லாரன்ஸ்..ருத்ரன் நியூ லுக்குடன் வெளியான ரிலீஸ் டேட் !
மேலும் இந்திய கிரிக்கெட் வீரர் பதான் மற்றும் ஷெட்டி, காலித் மற்றும் மேத்யூ இதன் மூலம் அறிமுகமாகின்றனர்.ஏஆர் ரஹ்மான் இசையமைபில் உருவாகும் இந்த படத்திற்கு ஒளிப்பதிவை ஹரிஷ் கண்ணன் மேற்கொள்ள எடிட்டிங் ஒர்க்கிற்காக புவன் ஸ்ரீனிவாசன் ஒப்பந்தமாகியுள்ளார்.
வரும் ஆகஸ்ட் 11 - தேதி வெளியாகும் என அறிவிக்கப்ட்டுள்ள இந்த படம் பான்-இந்தியன் வெளியீடாக தமிழ், கன்னடம், ஹிந்தி, தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் என முன்னதாக தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளுக்கு...ஒட்டிப்போன வயிற்றுடன் செம ஸ்லிம் பிட்டான ஸ்ருதிஹாசன்..ஹாட் போட்டோஸ் உள்ளே!
இதற்கிடையே கோப்ரா படத்தின் மாஸ் பர்ஸ்ட் லுக் மற்றும் தும்பி துள்ளல் கடந்த ஜூன் 29-ம் தேதி வெளியாகி ஆதரவை பெற்றது. இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இரண்டாவது சிங்கிள் உயிர் உருகுதே பாடலின் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு...ஆர்ஆர்ஆர், விக்ரம் பிளாக்பாஸ்டர்களை பின்னுக்கு தள்ளிய கடைசி விவசாயி !