டோண்ட் ஒரி கேரளா… வெள்ள நிவாரண நிதியாக ஒரு கோடி ரூபாய் அள்ளிக் கொடுத்த ஏ.ஆர்.ரகுமான் !!

By Selvanayagam PFirst Published Sep 3, 2018, 9:34 AM IST
Highlights

அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்தி வந்த இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான், கேரளாவில் மழை வௌளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

கேரளாவில்  கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளதால் அந்த மாநிலமே நீரில் மூழ்கியது. இந்த வெள்ளத்தில் சிக்கி 400 பேர் வரை உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். ஆயிரத்துக்கு அதிகனோர்  வீடுகளை இழந்து, இருக்க இடமின்றி நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

வெள்ளச் சேதத்தில் இருந்து மீள்வதற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும் நிலையில், பொது மக்கள் , பல்வேறு மாநிலங்கள் , தொழிலதிபர்கள் ,  நடிகர்கள், நடிகைகள்  என ஏராளமானோர் நிதியுதவி மற்றும் தேவையான பொருட்களை அனுப்பி வருகின்றனர்.

இது வரை ஆயிரம் கோடி ருபாய் அளவுக்கு நிதியுதவி கேரளா அரசால் பெறப்பட்டுள்ளது. மத்திய அரசு 600 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்தி வந்த ஏ.ஆர்.ரகுமான், ரூ.1 கோடி கேரள மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவியாக வழங்கியுள்ளார். 

அமெரிக்காவின்  லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘முஸ்தபா... முஸ்தபா...’ என்ற பாடலைப் பாடினார். அந்தப் பாடலை முடிக்கும்போது, ‘கேரளா... கேரளா... டோண்ட் வொர்ரி கேரளா... காலம் நம் தோழன் கேரளா...’ என்று பாடினார்.

அதைக் கேட்டதும் அங்கு இருந்த இந்தியர்கள் உள்ளிட்ட அனைவரும்  பலத்த கரவொலி எழுப்பினர் வரவேற்றனர். இந்த தகவலை ஏ.ஆர்.ரகுமான் தனது டுவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்..

click me!