கனம் கோர்ட்டார் அவர்களே காப்பாத்துங்க... முன் ஜாமீன் கேட்கும் ஏ.ஆர்.முருகதாஸ்

Published : Nov 09, 2018, 11:28 AM IST
கனம் கோர்ட்டார் அவர்களே காப்பாத்துங்க... முன் ஜாமீன் கேட்கும் ஏ.ஆர்.முருகதாஸ்

சுருக்கம்

போலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் தன் மீது புகார் இருப்பதால், தான் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் இன்று காலை  சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.


 போலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் தன் மீது புகார் இருப்பதால், தான் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் இன்று காலை  சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.

தமிழ்சினிமா இதுவரை காணாத ஒரு பெரும் பரபரப்பை முருகதாஸின் ‘சர்கார்’ படம் உண்டாக்கியுள்ளது. அதன் உச்சமாக முருகதாஸ் மக்கள் மத்தியில் வன்முறையைத் தூண்டுவதால் அவர் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்து அவரைக் கைது செய்யவேண்டும் என்று தேவராஜன் என்னும் சமூக ஆர்வலர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவு முருகதாஸின் வீட்டுக்கதவைத் தட்டிய போலிஸார், அவர் கையில் அகப்படாததால் ‘ச்சும்மா பாத்துட்டுப்போக வந்தோம்’ என்று ப்ளேட்டைத் திருப்பிப் போட்டனர்.

இந்நிலையில் தனது தனது வழக்கறிஞர்கள் கூட்டத்துடன் சென்னை உயர்நீதிமன்றம் வந்த முருகதாஸ், தன்னை போலிஸார் எந்த நேரமும் கைதுசெய்யக்கூடும் என்பதால் தனக்கு முன் ஜாமின் வழங்கவேண்டும் என்றும் அதை அவசர வழக்காக விசாரிக்கும்படியும் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வாய்ப்பிருந்தால் அம்மனு மீது இன்று மதியமே விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி