’ரஜினி 167’ல் நயன்தாராவைத் தவிர இன்னும் ஒருத்தரைக்கூட கமிட் பண்ணலையாம்ங்க...

Published : Apr 08, 2019, 04:33 PM IST
’ரஜினி 167’ல் நயன்தாராவைத் தவிர இன்னும் ஒருத்தரைக்கூட கமிட் பண்ணலையாம்ங்க...

சுருக்கம்

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கும், ’ரஜினி 167’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள ஏ.ஆர். முருகதாஸ் படத்துக்கும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் நடிகர் பட்டாளங்களைக் கொண்டுபோய்க் குவிப்பதையே பல்வேறு இணையதளங்களும் முக்கிய வேலைகளாய்ச் செய்துவரும் நிலையில், ‘போதும் நிறுத்துங்க சாமிகளா, எங்க படத்துக்காக நடிகர்களை நாங்களே செலக்ட் பண்ணிக்கிறோம்’ என்று கொந்தளித்துள்ளது முருகதாஸ் படக்குழு.  

நாளை மறுநாள் மும்பையில் தொடங்கவுள்ள ரஜினி-ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நயன்தாரா நாயகியாக கமிட் பண்ணப்பட்டுள்ள நிலையில் முக்கிய வேடத்தில் அமிதாப் பச்சன்,  காமெடியனாக யோகிபாபு, வில்லனாக நடிகர், இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா, ரஜினியின் மகளாக ‘பாபநாசம்’ நிவேதா தாமஸ் ஆகியோர் பெயர்கள் வரிசையாக அடிபட்டன.

இச்செய்திகளைக் கண்டு கொதித்துப்போன இயக்குநர் முருகதாஸ் ரஜினி மற்றும் படத்தின் மக்கள் தொடர்பாளரான ரியாஸ் அகமத் மூலம் வெளியிட்டுள்ள ஒரு ட்விட்டர் அறிவிப்பில், ...அன்பார்ந்த மீடியா நண்பர்களே இதுவரை ‘ரஜினி 167’ படத்தில் நயன்தாரா தவிர வேறு யாருமே அதிகாரபூர்வமாக கமிட் பண்ணப்படவில்லை. எனவே நாங்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் வரை தயவு செய்து அமைதிகாக்கவும்’... என்று தெரிவித்துள்ளார்.

இயக்குநர் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ பட நட்சத்திரப் பட்டியை இதைவிடப் பெரியதாகவும் பயங்கரமானதாகவும் இருப்பதால் இதே போன்றதொரு மறுப்புச் செய்தியை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்திலிருந்தும் எதிர்பார்க்கலாம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் ஒன்று சேர்ந்த பழனிவேல் – சரவணன் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் டுவிஸ்ட்!
ரேவதிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய கார்த்திக்; சந்திரகலா ஷாக், சாமுண்டீஸ்வரி ஹேப்பி; கார்த்திகை தீபம் டுவிஸ்ட்!