
தமிழகத்தைப் பொறுத்தவரை சன் தொலைக்காட்சி தற்போது வரை பொதுமக்களின் வரவேற்பைப் பெற்று செயல்பட்டு வருகிறது. பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், இசைப் போட்டிகள், புதிய சினிமா என கலக்கி வருகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சன் தொலைக்காட்சியை அடித்துக்கொள்ள ஒரு சேனல் இல்லை என்னும் அளவுக்கு போடடியில்லாமல் இருந்தது. அப்போது தான் விஜய் டி.வி.களத்தில் இறங்கியது.
சன்னுக்கு போட்டியாக புதிய, புதிய நிகழ்ச்சிகள், நகைச்சுவை நிகழ்ச்சிகள் என விஜய் டி.வி. கலக்கத் தொடங்கியது. தற்போது சன் டி.வி.யைப் பின்னுக்குத்தள்ளி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.
இந்நிலையில்தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் இந்த இரண்டு தொலைக்காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு கெத்து காட்ட புதிய தொலைக்காட்சி ஒன்றை தொடங்குகிறார்.
ஏற்கனவே ஸ்டாலினின் மருமகன் சபரீசன் நிர்வாகத்தின் கீழ் புதிய தொலைக்காட்சி தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில், புதிய தொலைக்காட்சியின் முழுப்பொறுப்பையும் உதயநிதி ஸ்டாலின் ஏற்றுள்ளார்.
திமுகவின் டெல்லி முகமாக மட்டுமே செயல்பட சபரீசனை ஸ்டாலின் கூறியுள்ளதால், இந்த புதிய தொலைக்காட்சிக்கு உதயநிதி ஸ்டாலின் தலைமை ஏற்று நடத்த உள்ளார்.
கதிரவன் பிராட்காஸ்டிங் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் கீழ் இந்த தொலைக்காட்சி தொடங்கப்பட உள்ளது. இதற்காக பல பெரிய தொலைக்காட்சி நிறுவனங்களில் பணிபுரிந்து வந்த முக்கிய நபர்களை மடக்கி உயநிதி ஸ்டாலின் பேசியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அனுபவம் வாய்ந்த நிதி அதிகாரிகள், நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் உதயநிதியுடன் கரம் கோர்த்துள்ளனர். முரசொலி நாளிதழின் எம்.டி. யான உள்ள உதயநிதி. சினிமா தயாரிப்பு, சினிமா விநியோகம், நடிப்பு என பன்முகங்களைக் கொண்டவராக தற்போது ஜொலித்து வருவதால் இந்த புதிய தொலைக்காட்சியை வெற்றிகரமாக நடத்துவார் என கூறபடுகிறது.
இந்த டி.வி. முற்றிலும் பிரமாண்ட பொழுது போக்கு நிகழ்ச்சிகளை மட்டுமே குறிவைத்து தொடங்க உள்ளதால் பிரபல தொலைக்காட்சிகளான சன், விஜய் ஜீ தமிழ் போன்ற வற்றுக்கு உதயநிதி ஸ்டாலின் சரியான டஃப் கொடுப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.