
12 நாள் படம்!
'துப்பறிவாளன்', 'இரும்புத்திரை', ஆகிய படங்களில் நடித்த ராம்குமார் 'கோக்கோ மாக்கோ' என்ற படத்தின் மூலம் கதாநாயகன் ஆகியிருக்கிறார்.
இவருக்கு ஜோடியாக தனுஷா நடிக்கிறார். இவர்களுடன் ஒய்.ஜி மகேந்திரன், டெல்லி கணேஷ், சாங் அஜய்ரத்னம், சந்தானபாரதி, தினேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர். படத்துக்கு இசை அமைத்து டைரக்ட் செய்துள்ள அருண்காந்த் கூறுகையில், ஒரு பயணத்தின் போது ஏற்படும் காதலை திகிலுடன், இந்த படத்தில் சொல்லியிருக்கிறோம். 'கோக்கோ மாக்கோ' என்றால் தமாஷ் என்று அர்த்தம். பெரும்பகுதி கதை கடற்கரை பகுதிகளில் நடப்பதுபோல் இருக்கும். படம் ஆரம்பம் முதல் இறுதிவரை சிரிக்க வைக்கும் இளம் தலைமுறையினரை கவர்ந்து இழுக்கும் வகையில் திரைக்கதை அமைத்து இயக்கி இருப்பதாக கூறினார். மேலும்12 நாட்கள் சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் நடைபெற்று முடிவடைந்துள்ளதாக தெரிவித்தார்.
6 கோடி கேட்ட நடிகர்!
இந்தி பட உலகை நம்பி, மும்பையில் குடியேறிவிட்ட நடிகர் விளையாட்டு படத்தின் மூலம் இரண்டாவது ரவுண்டு வந்தார்.
அவருடைய மறுபிரவேசம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்த்தார்கள். அப்படி எதுவும் நடக்கவில்லை என்றாலும் அந்த நடிகர் தனது சம்பளத்தை ரூபாய் 2 கோடியாக உயர்த்தி விட்டார்.
இந்நிலையில், சமீபத்தில் அவரிடம் ஒரு இயக்குனர் கதை சொன்னாராம் அவரிடம் ரூபாய் 6 கோடி சம்பளம் கேட்டாராம் நடிகர். கதை பிடிக்கவில்லை என்றால் இப்படி அதிக சம்பளம் கேட்பது அந்த நடிகரின் வழக்கம் என்கிறார் ஒரு தயாரிப்பாளர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.