ஒரு நாயகி உதயமாகிறாள்! தங்கச்சி பாடலில் கலக்கிய நடிகைக்கு நாயகி வாய்ப்பு...

 
Published : Nov 13, 2017, 11:14 AM ISTUpdated : Sep 19, 2018, 01:26 AM IST
ஒரு நாயகி உதயமாகிறாள்! தங்கச்சி பாடலில் கலக்கிய நடிகைக்கு நாயகி வாய்ப்பு...

சுருக்கம்

A heroine is raising The heroine of the song

"மேயாத மான்" படத்தில் வைபவின் தங்கச்சியாக நடித்து  தங்கச்சி பாடலில் கலக்கல் நடனம் ஆடிய நடிகை இந்துஜா, "பில்லா பாண்டி" படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார்.

நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த இந்துஜா, 'மேயாத மான்' பட ஆடிஷனில் கலந்துகொண்டு படத்தில் நடிக்கத் தேர்வானார்.

அதில் ஹீரோயினாக நடித்த ப்ரியா பவானிஷங்கரை விட இந்துஜா நடித்த கேரக்டர்தான் அதிகம் பேசப்பட்டது. அப்படி ஒரு எதார்த்த நடிப்பு. செம்ம டான்ஸும் கூட.

வடசென்னை பெண்ணாக நைட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு இவர் போட்ட ஆட்டத்தை அனைவரும் ரசித்தனர். இதனால் படம் வெளிவருவதற்கு முன்பே இந்துஜாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது.

தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் ஹீரோவாக நடிக்கும் 'பில்லா பாண்டி' படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் இந்துஜா.

'மேயாத மான்' படத்தில் சென்னை பெண்ணாக கலக்கியவர் இதில் மதுரைக்காரப் பெண்ணாக கலக்க இருக்கிறார். சுத்த தமிழ் பேசும் இன்னொரு நடிகையாக வளர்ந்து வருகிறார் இந்துஜா.

பில்லா பாண்டி படத்தின் மூலம் கோலிவுட்டை ஒரு கலக்கு கலக்க இருக்கும் இந்துஜாவுக்கு இப்போதே ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அப்பாவாக போகும் நாக சைதன்யா; சமந்தாவுக்கு கொடுக்கும் அதிரடி ஷாக்!
செத்துப் பிழைத்துள்ளேன், எதுவும் பேச விரும்பவில்லை: மனவேதனையுடன் செல்வராகவன் பேசிய உருக்கமான வீடியோ!