
“உன்னை காணாது நான் இன்று” என தொடங்கும் விஸ்வரூபம் படத்தில் இடம் பெற்ற பாடலை கேரள தொழிலாளி ஒருவர் பாடி அசத்தி உள்ளார். தன்னுடைய நிலத்தில் அமர்ந்தவாறு இந்த பாடலை அவர் பாடி உள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெகுவாக பரவி வருகிறது. இவரது அற்புதமான குரல் வளாத்தில் மிகவும் அழகாக பாடி உள்ளார்.
உண்மையில் இந்த படத்திற்காக இந்த பாடலை பாடியவர் ஷங்கர் மகாதேவன். இந்த தொழிலாளியின் பாடலை கேட்ட இவர் அவருடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும் எனவும், அவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காகவும் இவரை வலைவீசி தேடி வருகிறார்.
அவரை தேடி கண்டுப்பிடிக்க தயவு செய்து உதவுங்கள் என்றும் குறிப்பிட்டு உள்ளார். மேலும் நம் நாட்டில் இது போன்ற திறமைசாலிகள் இருப்பது நினைத்தாலே மிகவும் பெருமையாக உள்ளது என்றும் தெரிவித்து உள்ளார்.
இதனை தொடர்ந்து வலைத்தளவாசிகள் இவரின் பாடலை பதிவிட்டு இவரை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
பல பிரபலங்கள் மத்தியில் பிரபலம் ஆன கேரளா தொழிலாளியை நினைத்து அனைவரும் பெருமை கொள்ள செய்கின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.