
பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத் வாழ்க்கை படமான "சஞ்சு" என்ற படத்தில் பெண்களை தவறாக சித்தரித்து காண்பித்துள்ளதாக, அதில் நடித்துள்ள ரன்பீர் கபூர் அனுஷ்கா ஷர்மா மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அனுஷ்கா ஷர்மா முக்கிய வேடத்தில் நடித்து உள்ளார்
இந்த படத்தின் காட்சியை, நேற்று பாலிவுட் நடிகர் நடிகைகளுக்கு திரையிடப்பட்டு காட்டப்பட்டது.
கதைக்களம்
இந்த படத்தில், சஞ்சய் தத்துக்கும் மற்ற பெண்களுக்கும் இடையே உள்ள தொடர்புகள் என்ன...? குடி பழக்கம் உள்ளிட்ட மற்ற கெட்ட பழக்கத்திற்கு அடிமையானது முதல் மும்பை குண்டு வெடிப்பு, சிறை செல்வது உள்ளிட்ட பல காட்சிகள் இந்த படத்தில் இடம் பெற்று உள்ளது
இந்த படத்தில் குறிப்பாக 300 பெண்களுக்கு மேல் சஞ்சய் தத்துடன் உறவில் உள்ளதாக காண்பிக்கப்படும் காட்சிகளில், பெண்களை மிகவும் இழிவு படுத்துவதாக உள்ளது என்றும், பெண்களுக்கு எதிரான பல எதிர் கருத்துக்கள் இந்த படத்தில் இடம் பெற்று உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு சமூக ஆர்வலர் கவுரவ் எதிர்ப்பு தெரிவித்து, இந்த படத்தில் நடித்துள்ள ரன்பீர் கபூர் மற்றும் அனுஷ்கா ஷர்மா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய, போலீசில் புகார் தெரிவித்து உள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.