ஆன்லைன் சூதாட்டத்திற்கு விளம்பரம்: விராட் கோலி, தமன்னாவை கைது செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jul 31, 2020, 01:33 PM ISTUpdated : Jul 31, 2020, 02:33 PM IST
ஆன்லைன் சூதாட்டத்திற்கு விளம்பரம்: விராட் கோலி, தமன்னாவை கைது செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு...!

சுருக்கம்

அதுமட்டுமின்றி ஆன்லைன் சூதாட்டத்தை நிர்வகித்து வரும் நபர்களை கைது செய்வதோடு, இதுபோன்ற ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் விளம்பரத்தில் நடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் நடிகை தமன்னா உள்ளிட்டோரை கைது செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

தற்போதைய இன்டர்நெட் யுகத்தில் ஆன்லைனில் அறிமுகமாகியுள்ள சூதாட்டங்கள் பெரும் பிரச்சனைகளை சத்தமில்லாமல் உருவாக்கி வருகின்றனர். அதுவும் லாக்டவுன் நேரத்தில் வீட்டிற்குள் முடங்கியிருக்கும் இளைஞர்கள் பலரும் ஆன்லைன்  சூதாட்டத்திற்கு அடிமை ஆகிவருகின்றனர். சமீபத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த சென்னையைச் சேர்ந்த நித்திஷ் குமார் என்ற கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதையடுத்து பல அரசியல் கட்சிகளும் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்களை தடை செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்து வந்த நிலையில்,  ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடித்து வரும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, நடிகை தமன்னா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அய்யா வைகுண்டர் மக்கள் கட்சி சார்பில் டிஜிபியிடம் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை கோரி சென்னையச் சேர்ந்த வழக்கறிஞர் சூரிய பிரகாசம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

 

இதையும் படிங்க: ராஜமாதா கெட்டப்பில் வனிதா... தீயாய் பரவும் போட்டோவை பார்த்து கண்டபடி கலாய்க்கும் நெட்டிசன்கள்...!

இதுகுறித்து அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், அதிகரித்து வரும் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு இளைஞர்கள் அடிமையாகி வருவதாகவும்,  கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகை தமன்னா போன்ற பிரபலங்கள் அப்படிப்பட்ட விளம்பரங்களில் நடிப்பதால், இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டியுள்ளார். உயர் நீதிமன்றம் தடை விதித்த ப்ளூவேல் கேமை விட ஆன்லைன் சூதாட்டங்கள் ஆபத்தானது என்பதால், அதையும் உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். 

 

இதையும் படிங்க: நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையிலான வயது வித்தியாசம் எவ்வளவு தெரியுமா?

அதுமட்டுமின்றி ஆன்லைன் சூதாட்டத்தை நிர்வகித்து வரும் நபர்களை கைது செய்வதோடு, இதுபோன்ற ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் விளம்பரத்தில் நடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் நடிகை தமன்னா உள்ளிட்டோரை கைது செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வு, மனுவை வரும் செவ்வாய்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவதாக தெரிவித்துள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?