மறக்க முடியுமா ராம் - ஜானுவை..! ஒரு வருடத்தை நிறைவு செய்த '96'..!

By manimegalai aFirst Published Oct 4, 2019, 12:45 PM IST
Highlights

இயக்குனர் சி.பிரேம்குமார் இயக்கத்தில், கடந்த 2018 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி வெளியான திரைப்படம், '96 ' நான்கு ஆண்டுகளாக ஒரு வெற்றி படத்தையாவது கொடுக்க வேண்டும் என போராடி வந்த நடிகை 'திரிஷாவிற்கு' இப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.

இயக்குனர் சி.பிரேம்குமார் இயக்கத்தில், கடந்த 2018 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி வெளியான திரைப்படம், '96 ' நான்கு ஆண்டுகளாக ஒரு வெற்றி படத்தையாவது கொடுக்க வேண்டும் என போராடி வந்த நடிகை 'திரிஷாவிற்கு' இப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.

விஜய் சேதுபதி, இந்த படத்தில் புகைப்பட கலைஞராக நடித்திருந்தார். ராம் - ஜானு என்கிற கதாப்பாத்திரங்களில் நடித்திருந்த இவர்களுடைய நடிப்பு ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவரும் விதமாக இருந்தது. அதே போல் சிறிய வயது ராம் ஜானுவாக நடித்த கௌரி மற்றும் ஆதித்யாவின் நடிப்பும் வேற லெவல்.

தன்னுடைய பள்ளி நண்பர்களை நீண்ட வருடங்களுக்கு பிறகு சந்திக்கும் போது ஏற்படும் புதுவிதமான அனுபவங்கள், அவர்களுடைய சிறு வயது காதல் என, ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நடந்த எதார்த்தமான விஷயங்களை வைத்து சுவாரஸ்யமாக படத்தை இயக்கி இருந்தார் இயக்குனர் பிரேம்குமார். இந்த படத்தை தயாரித்திருந்தது மெட்ராஸ் என்டர்பிரைசஸ் நிறுவனம். 

இந்த படத்திற்கு பிறகு, பலர் மீண்டும் தங்களுடைய பள்ளி நண்பர்களை பார்த்ததாகவும், இந்த படம் தங்களுடைய வாழ்க்கையை திரும்பி பார்க்க வைத்ததாகவும் உணர்ச்சிவசத்தோடு தெரிவித்தனர். இதுவே இந்த படத்தின் வெற்றியாகவும் பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இந்த படம் வெளியாகி இன்றுடன் ஒருவருடம் நிறைவடைகிறது. இதனை கொண்டாடும் விதமாக விஜய் சேதுபதியின் ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள். அதே போல் படக்குழுவினருக்கும், திரிஷா மற்றம் விஜய் சேதுபதி ஆகியோருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

தற்போது இப்படத்தை தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!