
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சென்னை தவிர பிற பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் சென்னையில் மது கிடைக்காத குடிமகன்கள் பிற பகுதிகளுக்குச் சென்று மதுபாட்டில்களை சட்ட விரோதமாக கடத்தி வர ஆரம்பித்துள்ளனர். இதை தடுப்பதற்காக சென்னையில் எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. போலீசார் இரவு, பகல் பாராமல் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் சென்னை வந்த காரில் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நயன்தாராவின் பளபளக்கும் அழகிற்கான ரகசியம்... 35 வயதிலும் சும்மா நச்சுன்னு இருக்க காரணம் இதுதான்...!
வெள்ளித்திரையில் “படையப்பா” நீலாம்பரி, “பாகுபலி” சிவகாசி தேவி என பட்டையைக் கிளப்பி வரும் ரம்யா கிருஷ்ணன், இடை இடையே சீரியல்கள், வெப் சீரிஸ் ஆகியவற்றிலும் நடித்து வருகிறார். கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காட்டில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் கடந்த வியாழக்கிழமை இரவு கானாத்தூர் போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த இன்னோவா காரை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். அதற்குள் நடிகை ரம்யா கிருஷ்ணன், அவரது சகோதரி வினயா கிருஷ்ணன் மற்றும் ஓட்டுநர் ஆகியோர் இருந்துள்ளனர்.
இதையும் படிங்க: சிக்கென ஸ்லிம் லுக்கில் நயன்தாரா.... புடவையில் இதுவரை யாருமே பார்த்திருக்காத ஸ்பெஷல் போட்டோ ஷூட்...!.
காரை சோதனையிட வேண்டுமென போலீசார் கேட்க, ரம்யா கிருஷ்ணனும் அதற்கு சம்மதித்துள்ளார். அதையடுத்து காரை சோதனை செய்த போது 96 பீர் பாட்டில்கள், 8 மதுபாட்டில்கள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். ஊரடங்கு நேரத்தில் மதுபாட்டில்களை எடுத்துச் செல்வது விதிமீறலாகும். அதனால் மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக சென்னை அபிராமபுத்தைச் சேர்ந்த செல்வக்குமார் என்ற டிரைவரையும் கைது செய்தனர். சிறிது நேரத்திற்கு பிறகு காவல்நிலையம் சென்ற ரம்யாகிருஷ்ணனும், அவருடைய சகோதரி வினயா கிருஷ்ணனும் டிரைவர் செல்வகுமாரை ஜாமினில் அழைத்துச் சென்றுள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.