ஒரு பயலுகளையும் நம்ப முடியலை...ஒரு திருட்டுக்கதைக்கு அடித்துக்கொள்ளும் பாரதிராஜாவும், 96 பட இயக்குநர் பிரேமும்...

By vinoth kumarFirst Published Nov 2, 2018, 11:22 AM IST
Highlights

96 படக்கதை என் உதவியாளர் சுரேஷ் ‘92 என்ற பெயரில் எனக்கு சொன்னது. அதை நான் இயக்கலாம் என்று முடிவெடுத்தபோது பிரேம் அதை ‘96 என்ற பெயரில் திருடிவிட்டார் என்று பொரிந்து தள்ளிய பாரதிராஜா தன்னை போனிலும் அசிங்க அசிங்கமாக திட்டியதாக நேற்று பத்திரிகையாளர்களை அழைத்து நீலிக்கண்ணீர் வடித்தார் இயக்குநர் பிரேம்.

‘96 படக்கதை என் உதவியாளர் சுரேஷ் ‘92 என்ற பெயரில் எனக்கு சொன்னது. அதை நான் இயக்கலாம் என்று முடிவெடுத்தபோது பிரேம் அதை ‘96 என்ற பெயரில் திருடிவிட்டார் என்று பொரிந்து தள்ளிய பாரதிராஜா தன்னை போனிலும் அசிங்க அசிங்கமாக திட்டியதாக நேற்று பத்திரிகையாளர்களை அழைத்து நீலிக்கண்ணீர் வடித்தார் இயக்குநர் பிரேம். 

அதற்கு ஆதாரமாக துண்டு துண்டாக எழுதிவைத்திருந்த தனது ஸ்கிரிப்ட் பேப்பர்களையும் ஒவ்வொரு பத்திரிகையாளராக விநியோகம் செய்தார். அவர் யோக்கியர்தான் என்று முழுமையாக நம்பிய மீடியா மக்கள் அவரை முழுமையாக நம்பி பாரதிராஜாவுக்கு எதிராகவும்,பிரேமுக்கு ஆதரவாகவும் வெளியிட்டனர். 

ஆனால் இன்று இணையங்களில் தென்பட்ட செய்தி ஒன்று மேற்படி இருவரின் யோக்கியதைகளையும் புட்டுப்புட்டு வைக்கிறது. ‘96 படமே முழுக்க முழுக்க ‘பிஃபோர் சன்ரைஸ்’ என்கிற படத்தின் அப்பட்டமான காப்பி. ரிச்சர்ட் லிங்க்லேட்டர், கிம் கிரிசன்  ஆகிய இருவர் இணைந்து இப்படத்தின் கதை, திரைக்கதையை எழுதியிருக்கிறார்கள்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக பாரதிராஜா ரிச்சர்ட் லிங்லேட்டர் ஆகவும், பிரேம் கிம் கிரிசனாகவும் மாறி ஊடகங்களையும், தமிழ் ஜனங்களையும் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

click me!