நம்புனா நம்புங்க... ஏ.ஆர். முருகதாஸ் காப்பியே அடிக்காத ஒரு படமும் இருக்கத்தான் செய்யுது...

By vinoth kumarFirst Published Nov 2, 2018, 10:13 AM IST
Highlights

சர்கார் விவகாரத்தில் கோர்ட்டில் உண்மையை ஒப்புக்கொண்ட பிறகு ரொம்ப ஓவராகத்தான் ஏ.ஆர்.முருகதாஸை வம்பிழுக்கிறார்கள். மிச்சப் பஞ்சாயத்தை விமர்சனம் எழுதுறப்ப வச்சுக்கலாம் என்கிற பெருந்தன்மை கூட இல்லாமல், அடிச்சா ஏன்னு கேட்க ஆளில்லாத கைப்புள்ளய அடிப்பதுபோலவே, சகட்டுமேனிக்கு அடிக்கிறார்கள்.

சர்கார் விவகாரத்தில் கோர்ட்டில் உண்மையை ஒப்புக்கொண்ட பிறகு ரொம்ப ஓவராகத்தான் ஏ.ஆர்.முருகதாஸை வம்பிழுக்கிறார்கள். மிச்சப் பஞ்சாயத்தை விமர்சனம் எழுதுறப்ப வச்சுக்கலாம் என்கிற பெருந்தன்மை கூட இல்லாமல், அடிச்சா ஏன்னு கேட்க ஆளில்லாத கைப்புள்ளய அடிப்பதுபோலவே, சகட்டுமேனிக்கு அடிக்கிறார்கள். 

எனவே அவர் மீது தொடர்ந்து திருட்டுப்பட்டம் சுமத்துபவர்களுக்கு, கதையை திருடவே திருடாமல் அவர் இயக்கிய படம் ஒன்றும் இருக்கத்தான் செய்கிறது என்பதை இந்த உலகத்துக்கு சொல்லியே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதற்கு முன்பாகவே நேற்று முதல் நடமாடி வரும் அவர் திருட்டுப்பட்டம் சுமந்து வரும், படங்களின் விபரங்களைப் பார்த்துவிடுவதும் நல்லது.  இவ்வளவு காலமும் இல்லாமல் ‘தீனா’வும் இந்தப்பட்டியலில் இடம்பெற்ற கொடுமையை என்னவென்று சொல்வதம்மா? 

(1) தீனா
இந்த கதை R. நித்தியகுமார் என்ற இயக்குநரின் கதை.. இவர் K. சுபாஷ், SJ. சூர்யா, இவர்களிடம் இனை இயக்குநராகவும்.. பிறகு நடிகர் அருன்விஜய் நடித்த, வேதா’திரைப்படத்தை இயக்கியவர்.

( 2 ) ரமணா
இந்த கதை நந்தகுமார் என்ற இயக்குநரின் கதை.. இவர் மறைந்த இயக்குநர் ராஜசேகர்,மற்றும் P. வாசு அவர்களிடம் இனை இயக்குநராகவும் பிறகு விஜயகாந்த் நடித்த தென்னவன் ‘திரைப்படத்தை இயக்கியவர்… இவர் KT. குஞ்சுமோன் ( திரைப்பட தயாரிப்பாளர்) இவரின் மகனை வைத்து கோட்டீஸ்வரன் என்ற படத்தை இயக்கும் போது..AR. முருகதாஸ்…. நந்தகுமாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார்,

( 3 ) கஜினி
இந்த படத்தின் கதை … மெமொன்டோ என்ற ஒரு ஆங்கில படத்திலிருந்து ஒரு பட்டப்பகலில் திருடப்பட்டது.

( 4 ) துப்பாக்கி
இந்த கதை வாசு என்ற உதவி இயக்குநரிடம்,பாதி கதை பிரேம்குமார் என்ற உதவி இயக்குநரிடமிருந்து திருடப்பட்டது.. வாசு… இவர் அஜீத் நடித்த நிறைய படங்களுக்கு உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார் .

( 5 ) கத்தி
இந்த கதை… கோபி நயினார் என்ற இயக்குநரின் கதை.  இவர் நயன்தாரா நடித்த ‘ அறம் ‘ படத்தை இயக்கியவர்..

(6) ஸ்பைடர் மேன்
இந்த கதை இவரிடம் தெலுங்கு படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய சாம்சன் சைத்தானியா என்ற உதவி இயக்குநரிடமிருந்து திருடப்பட்டது…

( 7 ) சர்க்கார் ‘
இந்த கதை… வருண் ராஜேந்திரன் என்பவரிடம் இருந்து திருடப்பட்டது… இவர் SA. சந்திரசேகர்.. மற்றும் பல இயக்குநர்களிம்…இனை இயக்குநராக பணியாற்றினார்.

 

 இப்படங்கள் இவ்வாறான பஞ்சாயத்துகளுடன் இருக்க, ஏ.ஆர். முருகதாஸ் பெயருக்கு எவ்வித களங்கமும் ஏற்படாத ஒரிஜினல் கதாசிரியருக்கு தரவேண்டிய உரிய மரியாதையை டைட்டில் கார்டில் கொடுத்து அவர் இயக்கிய ஒரு  படமும் இருக்கத்தான் செய்கிறது. 

அது  சோனாக்‌ஷி ஷின்ஹா நடிப்பில் இவர் இயக்கிய ‘அகிரா’ என்ற இந்திப்படம். தமிழில் சாந்தகுமார் இயக்கிய ‘மவுன குரு’ படத்தின் இந்தி ரீமேக்கான இதில் டைட்டில் கார்டில் சாந்தகுமாரின் பெயரை தகுந்த இடத்தில் போட்டிருந்தார். இனி இப்படி ஏ.ஆர்.முருகதாஸின் பாசிடிவ் பக்கங்களை தேடிப்பிடிக்க துவங்குவோமே...?

click me!