மீண்டும் கைகோர்க்கும் 80’ஸ் நாயகிகள்... அதிரடி அறிவிப்பால் திக்குமுக்காடும் ரசிகர்கள்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : May 12, 2020, 04:34 PM IST
மீண்டும் கைகோர்க்கும் 80’ஸ் நாயகிகள்... அதிரடி அறிவிப்பால் திக்குமுக்காடும் ரசிகர்கள்...!

சுருக்கம்

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழிகளில் தயாராக உள்ளது. இந்த படத்தில் 1980’களின் நட்சத்திர நாயகிகள் ராதிகா, குஷ்பு, ஊர்வசி, சுகாசினி ஆகியோர் நடித்துள்ளனர். 

மிராக்கிள் எண்டர்டைன்மென்ட் தயாரிப்பில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் எழுதி, இசையமைத்து, இயக்கும் ரொமாண்டிக் காமெடி ‘ஓ அந்த நாட்கள்’ . தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழிகளில் தயாராக உள்ளது. இந்த படத்தில் 1980’களின் நட்சத்திர நாயகிகள் ராதிகா, குஷ்பு, ஊர்வசி, சுகாசினி ஆகியோர் நடித்துள்ளனர். 

இதையும் படிங்க: பட்டன் போடாமல் படுகவர்ச்சியாய் போஸ் கொடுத்த பிக்பாஸ் அபிராமி... மரண பங்கம் செய்யும் நெட்டிசன்கள்...!

1980’களில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற நான்கு வெவ்வேறு படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருந்த ராதிகா, குஷ்பு, ஊர்வசி, சுகாசினி ஆகியோருடைய கதாபாத்திரங்களின் நீட்சியை பின்புலமாகக் கொண்டும், அவர்களின் தற்போதைய வாழ்வின் நிதர்சனத்தையும் அடித்தளமாக கொண்டும், ஒரு முற்றிலும் வித்தியாசமான குடும்ப பாங்கான கதையை படைத்திருக்கிறார் இயக்குனர் ஜேம்ஸ் வசந்தன். 

இதையும் படிங்க: கவர்ச்சியில் கரை கண்ட நயன்தாரா...தினுசு தினுசாய் ஹாட் போஸ் கொடுத்து அசத்திய கிளிக்ஸ்...!

80’ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக வலம் வந்த ராதிகா, குஷ்பு, ஊர்வசி, சுகாசினி ஆகியோர் இந்த படத்தில் ஒன்றாக நடிப்பது ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இவர்களுடன் ஜித்தின் ராஜ் - லதா ஹெக்டே ஜோடியும், ஒய் ஜி மகேந்திரன், சுலக்ஷனா, மனோபாலா, பானுசந்தர் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். மேலும் இயக்குநர் சுந்தர் சி சிறப்பு வேடத்தில் தோன்றி கலக்கியிருக்கிறாராம். 

இதையும் படிங்க: கவர்ச்சி போட்டியில் களம் இறங்கிய சுனைனா... சட்டையை கழட்டி விட்டு அட்டகாசம் செய்யும் ஹாட் கிளிக்ஸ்...!

இந்த படத்தின் 80 சதவீத காட்சிகள் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் படமாக்கப்பட்டுள்ளன.இப்படத்திற்கு ஷரன் சாமுவேல் கேமராவும், தேசிய விருது பெற்ற சாபு ஜோசப் எடிட்டிங்கும் கூடுதல் அழகு சேர்த்துள்ளது. நளினமான நடன அசைவுகளுக்கு ஜான் பிரிட்டோ பொறுப்பேற்றிருக்கிறார். படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இந்த படத்தில் இருந்து மெட்ராஸ் என்ன என்ற பாடல் வெளியாகி யூ-டியூப்பில் வைரலாகி வருகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சிரஞ்சீவி, மகேஷ் பாபு படங்களுடன் போட்டி; அரசியல் குறித்து சித்தார்த் விமர்சனம்!
நடிகை நிதி அகர்வால் மீது கைவச்சது யார்? அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய போலீஸ்