பள்ளி மாணவர்களை விடாது துரத்தும் கொரோனா…! திருவள்ளூர் மாவட்டத்தில் 6 மாணவர்கள் பாதிப்பு..!

By manimegalai aFirst Published Sep 18, 2021, 10:01 AM IST
Highlights

சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதால் அவர்கள் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.
 

சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதால் அவர்கள் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்த நிலையில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு உள்ள மாணவர்களுக்கு கடந்த 1ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கி இருக்கின்றன. அனைத்து பள்ளிகளிலும் கொரோனா சுகாதார வழிகாட்டு நெறிமுறைகளை மாணவர்கள், ஆசிரியர்கள் பின்பற்றவேண்டும் என்றும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 

ஆனாலும், தமிழகத்தில் பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் கொரோனா தொற்றுக்கு இலக்காகி வருவது தொடர்கதையாகி வருகிறது. தென்காசி மாவட்டத்தில் ஒரே பள்ளியில் 22 மாணவர்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டது. 

திருப்பூர் மாவட்டத்திலும் கொரோனாவின் தாக்கம் மாணவர்களை விடவில்லை. மொத்தம் 5 பள்ளிகளை சேர்ந்த 11 மாணவர்களுக்கு கொரோனா இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து சக மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு, கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. பள்ளிகளுக்கும் கிருமி நாசினி செலுத்தப்பட்டு உள்ளது. 

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பம் தனியார் பள்ளி 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் 2 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது. மேலும் திருவேற்காட்டில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு மாணவர், பொன்னேரியில் ஒரு மாணவர் மற்றும் 2 கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு இருக்கிறது. அவர்கள் அனைவருக்கும் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

click me!