நம்பவா முடியுது? ...நான்காவது இடத்துக்குப் போன ‘2.0’...பொங்கல் ரிலீஸிலிருந்து ‘பேட்ட’ ஜகா வாங்குவது கன்ஃபர்ம்

Published : Dec 01, 2018, 10:11 AM IST
நம்பவா முடியுது? ...நான்காவது இடத்துக்குப் போன ‘2.0’...பொங்கல் ரிலீஸிலிருந்து ‘பேட்ட’ ஜகா வாங்குவது கன்ஃபர்ம்

சுருக்கம்

அஜீத்தின் ‘விஸ்வாசம்’ படத்துடன் ரஜினியின் ‘பேட்ட’ மோதவிருக்கும் சூழலில், அது ரஜினிக்கு எவ்வளவு பெரிய ஆபத்தாய் முடியும் என்று தமிழகம் முழுக்க தியேட்டர் உரிமையாளர்கள் எச்சரித்து வரும் நிலையில், ‘2.0’ வசூலும் முதல் நாளிலிருந்து டல்லடிக்கத் துவங்கவே ‘பேட்ட’ பொங்கல் ரிலீஸிருந்து பின் வாங்கும் என்று தெரிகிறது.


அஜீத்தின் ‘விஸ்வாசம்’ படத்துடன் ரஜினியின் ‘பேட்ட’ மோதவிருக்கும் சூழலில், அது ரஜினிக்கு எவ்வளவு பெரிய ஆபத்தாய் முடியும் என்று தமிழகம் முழுக்க தியேட்டர் உரிமையாளர்கள் எச்சரித்து வரும் நிலையில், ‘2.0’ வசூலும் முதல் நாளிலிருந்து டல்லடிக்கத் துவங்கவே ‘பேட்ட’ பொங்கல் ரிலீஸிருந்து பின் வாங்கும் என்று தெரிகிறது. 

 சமீபகாலமாக தியேட்டர் உரிமையாளர்கள், ஒவ்வொரு படத்துக்கும் எவ்வளவு டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்படுகின்றது என்பது முதல்கொண்டு கணக்கிட்டு வருகின்றனர். சென்னை ரோஹினி தியேட்டர் நிர்வாக அதிகாரி நிகிலேஷ் சூர்யா கடந்த 10ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில், ” ’விவேகம்’ படத்தின் டிக்கெட் முன்பதிவு சாதனையை இன்னும் எந்தத் திரைப்படமும் முறியடிக்கவில்லை; ‘கிங் ஆஃப் ஓப்பனிங்’ என்பதை மறுக்கமுடியாது. ‘விஸ்வாசம்’ படத்திற்காக காத்திருக்கிறோம்” என்று கூறியிருந்தார். இதனால், ’சர்கார்’ முறியடிக்கத்தவறிய இந்த சாதனையை ‘2.0’ திரைப்படம் முறியடிக்கும் என்றே அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால்,  நிகிலேஷ் சூர்யா நேற்று  (30ம் தேதி) தனது ட்விட்டர் பக்கத்தில் இதுவரை வெளியான தமிழ் படங்களில் அதிகமாக முன்பதிவு செய்யப்பட்ட முதல் 5 படங்களின் லிஸ்ட்டை வெளியிட்டுள்ளார். அதில், 28 ஆயிரம் டிக்கெட்கள் முன்பதிவுடன் ‘விவேகம்’ முதல் இடத்தில் உள்ளது. இதையடுத்து, 26 ஆயிரத்து 500 டிக்கெட்களுடன் ‘மெர்சல்’ இரண்டாம் இடத்திலும், 24 ஆயிரத்து 300 டிக்கெட்களுடன் 'பாகுபலி’ மூன்றாம் இடத்திலும், 22 ஆயிரத்து 300 டிக்கெட்களுடன் ’2.0’ நான்காம் இடத்திலும், 21 ஆயிரத்து 500 டிக்கெட்களுடன் ’சர்கார்’ ஐந்தாம் இடத்திலும் உள்ளது. ரோஹினி திரையரங்கத்தில் எவ்வளவு டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை பொறுத்தே இந்த ஒப்பீடு கொடுக்கப்பட்டுள்ளது.

Nikilesh Surya

 @NikileshSurya
 17h17 hours ago
More
Updated list of highest Pre-Booked movies @RohiniSilverScr (All Time Record):
1. #Vivegam - 28k
2. #Mersal - 26.5k
3. #Baahubali2 - 24.3k
4. #2Point0 - 22.3k
5. #Sarkar - 21.5k
#Official

இந்த தகவல் ரஜினி ரசிகர்களுக்கு மைல்ட் ஹார்ட் அட்டாக்கை உண்டு பண்ணும்தான். என்ன செய்வது ‘பேட்ட’ வரும்வரை காத்திருக்கவேண்டியதுதான்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஐட்டம் டான்ஸுக்காகவே ஆட்டநாயகியை தேடிப் பிடிக்கும் நெல்சன்: ஜெயிலர் 2, ரஜினி ஃபீலிங்க்ஸ் நிறைவேறுமா?
சாப்பாட்டுக்காகவே போகிறோம்; கல்யாண வீட்டில் ஏன் கரண் ஜோஹர் சாப்பிடுவதில்லை? காரணம் என்ன?