நடிகை ரியாமிகா தற்கொலையில் திடீர் திருப்பம் !! காதலன் வெளியிட்ட பகீர் தகவல் !!

Published : Dec 01, 2018, 08:03 AM IST
நடிகை ரியாமிகா தற்கொலையில் திடீர் திருப்பம் !! காதலன் வெளியிட்ட பகீர் தகவல் !!

சுருக்கம்

நடிகை ரியாமிகா தற்கொலை செய்து கொள்வதற்கு முன் 2 நாட்கள் வெளியே சென்று யாருடனோ தங்கியிருந்ததாகவும், மீண்டும் திருப்பி வந்தவுடன் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறியுள்ள அவரது காதலன் தினேஷ் அவர் யாருடன் தங்கியிருந்தார் என்பதை கண்டுபிடித்தால் அவர் தற்கொலைக்கான காரணத்தை தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

நடிகை ரியாமிகா ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ என்ற படத்தில் நடித்தவர். பின்னர் அவர் நடித்த ‘எக்ஸ் வீடியோஸ்’ படத்தின் மூலம் பிரபலமானார். இந்நிலையில் அவர் வளசரவாக்கத்தில் நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இவருக்கு சரியான பட வாய்ப்புகள் கிடைக்காததால் வருத்தத்தில் இருந்ததாகவும் மதனால் மனம் உடைந்து  தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் எனவும்  கூறப்படுகிறது. ரியா மிகா தற்கொலை செய்வதற்கு முன், நேற்று முன்தினம் இரவு காதலன் தினேஷை அவரின் வீட்டிற்கு அழைத்துள்ளார். ஆனால் வேலை காரணமாக தாமதமானதால் காலை வருவதாக தினேஷ் கூறிவிட்டார். இந்நிலையில் தான் ரியாமிகா தற்கொலை முடிவு எடுத்துள்ளார்.

ரியாமிகாவின் வருமானத்தை வைத்தே அவரின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. அவருக்கு சினிமாவில் சரியான வாய்ப்பு கிடைக்காததால், வருமாணம் இன்றி பணத்திற்கு தவித்துவந்துள்ளார். அதே சமயம் காதலனுடன் தகராறு என மன உளைச்சலில் இருந்த ரியாமிகா தற்கொலை முடிவு எடுத்ததாக தகவல் வெளியானது. 

இந்நிலையில் ரியாமிகாவின் காதலன் தினேஷிடம் போலீஸார்    விசாரணை நடத்தினர். அப்போது அவர் சொன்ன சில தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.

அவர் தற்கொலை செய்வதற்கு 2 நாட்களுக்கு முன் வெளியே யாருடனோ தங்கியிருக்கிறார். நான் செல்போனில் தொடர்பு கொண்ட போது கூட சரியாக பதிலளிக்கவில்லை என காதலன் தினேஷ் கூறியுள்ளார்.

அவர் வீட்டிற்கும் வரவில்லை. 2 நாட்கள் கழித்து வீட்டிற்கு வந்த போது தான் அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார். அதனால் அவர் யாருடன் தங்கியிருக்கியிருந்தார் என போலீஸார் தான் கண்டுபிடிக்க வேண்டும் என தினேஷ் தெரிவித்துள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஐட்டம் டான்ஸுக்காகவே ஆட்டநாயகியை தேடிப் பிடிக்கும் நெல்சன்: ஜெயிலர் 2, ரஜினி ஃபீலிங்க்ஸ் நிறைவேறுமா?
சாப்பாட்டுக்காகவே போகிறோம்; கல்யாண வீட்டில் ஏன் கரண் ஜோஹர் சாப்பிடுவதில்லை? காரணம் என்ன?