இரண்டே நாளில் சரிந்த 175 அடி உயர ‘சர்கார்’ கட் அவுட்...!

Published : Nov 04, 2018, 02:08 PM IST
இரண்டே நாளில் சரிந்த 175 அடி உயர ‘சர்கார்’ கட் அவுட்...!

சுருக்கம்

கொல்லம் நண்பன்ஸ்’ என்ற விஜய் வெறியர்களால் கேரளாவில் நிறுவப்பட்ட 175 அடி உயர கட் அவுட் ‘சர்கார்’ ரிலீஸாவதற்கு முன்பே அவசர அவசரமாக  தரையிறக்கப்பட்டது.

கொல்லம் நண்பன்ஸ்’ என்ற விஜய் வெறியர்களால் கேரளாவில் நிறுவப்பட்ட 175 அடி உயர கட் அவுட் ‘சர்கார்’ ரிலீஸாவதற்கு முன்பே அவசர அவசரமாக  தரையிறக்கப்பட்டது. இதுகுறித்து ட்விட்டரில் செய்தி வெளியிட்ட கொல்லம் நன்பண்ஸ் குரூப் ‘வீண் வதந்திகளை நம்பவேண்டாம். பலத்த காற்றும் மழையும் வர வாய்ப்பிருப்பதை உத்தேசித்துதான் கட் அவுட்டை இறக்கியிருக்கிறோம்’ என்று தெரிவித்திருக்கிறார்கள். 

கொல்லம் நகருக்கே வெளியே ஒரு மைதானத்தில் மூன்று தினங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டிருந்த அந்த 175 அடி உயர கட் அவுட் தான் இதுவரை இந்திய சினிமாவில் வைக்கப்பட்ட கட் அவுட்களிலேயே மிக உயரமானது என்று சொல்லப்பட்டது. இதைப் பார்வையிட சுற்றுலாப் பயணிகள் கூட வர ஆரம்பித்துவிட்டார்கள் என்று கொல்லம் நண்பன்ஸ் குரூப் உற்சாகம் அடைந்துகொண்டிருந்தபோது, கட்- அவுட் விஜயின் சில  உடல்பாகங்கள் காற்றுக்குத் தலைவணங்கி தரையை நோக்கிப் பயணம் செய்ய ஆரம்பித்தன. 

நிலமையின் விபரீதம் உணர்ந்த கொல்லம் நண்பன்ஸ் குரூப்பினர் இன்று காலை தாங்களே முன்வந்து கட் அவுட்டை கழட்டிவைக்க ஆரம்பித்துள்ளனர். பட ரிலீஸன்று மீண்டும் இந்த கட் அவுட் நிறுவப்படுமா என்பது குறித்து தகவல் இல்லை.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!