2.0’ ஷங்கர், ரஜினி, அக்‌ஷய்குமார், எமிஜாக்‌ஷன் வாங்குன சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Published : Nov 04, 2018, 01:17 PM IST
2.0’ ஷங்கர், ரஜினி, அக்‌ஷய்குமார், எமிஜாக்‌ஷன் வாங்குன சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சுருக்கம்

நான் சினிமாவுக்கு வந்து 28 வருடங்களாகின்றன. இத்தனை வருடங்களில் நடித்தபோது எடுத்த மொத்த நேரத்தையும் விட ‘2.0’ என்ற இந்த  ஒரு படத்துக்கு எடுத்த நேரம் அதிகம்’ என்கிறார் தமிழுக்கு முதல்முறையாக வில்லனாக அறிமுகமாகியிருக்கும் இந்தி ஸ்டார் அக்‌ஷய்குமார்.

நான் சினிமாவுக்கு வந்து 28 வருடங்களாகின்றன. இத்தனை வருடங்களில் நடித்தபோது எடுத்த மொத்த நேரத்தையும் விட ‘2.0’ என்ற இந்த  ஒரு படத்துக்கு எடுத்த நேரம் அதிகம்’ என்கிறார் தமிழுக்கு முதல்முறையாக வில்லனாக அறிமுகமாகியிருக்கும் இந்தி ஸ்டார் அக்‌ஷய்குமார். 

‘ஒரு நாளைக்கு மேக் அப் போட மூன்றுமணி நேரம் முதல் நான்கு மணிநேரம், அதைக் கலைக்க ஒரு மணிநேரம் என்று இந்தப் படத்துக்காக நான் பட்டபாடு சொல்லிமாளாது. ஆனால் படம் முடிந்து விஷுவல்களைப் பார்த்தபிறகு அந்தக் களைபெல்லாம் பறந்தோடிவிட்டது. இந்தப்படத்தின் மூலம் இயக்குநர் ஷங்கரிடம் நான் கற்றுகொண்டது ஏராளம். ஷங்கரை ஒரு இயக்குநர் என்பதை விட அவர் ஒரு சயிண்டிஸ்ட் என்றே சொல்வேன் ‘ என்கிறார் அக்‌ஷய்குமார்.

 

‘அப்பா ராணுவத்தில் பணியாற்றியவர் என்பதால் சிறுவயதிலிருந்தே அதிகாலை 4 மணிக்கே எழுந்துவிடும் பழக்கம் எனக்கு உண்டு. வாழ்நாளில் சூரியோதயத்தை நான் தரிசிக்காத நாளே இல்லை’ என்கிற அக்‌ஷய்குமாருக்கு இப்போது வயது 51. 

அது சரி இவ்வளவு அரும்பாடுபட்ட அக்‌ஷய் ‘2.0’ படத்துக்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? 30 கோடி ரூபாய் மற்றும் இந்தி ரைட்ஸில் பார்ட்னர். ரஜினி, ஷங்கர் இருவருக்கும் ஒரே தொகை ஜஸ்ட் 60 கோடி. எமி ஜாக்‌ஷன் சம்பளம்? ஹீரோ மற்றும் டைரக்டரின் சம்பளத்தை இருபதால் வகுத்துக்கொள்ளவேண்டியதுதான்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!