CIFF: மாமன்னன், விடுதலை, அநீதி உள்ளிட்ட 12 தமிழ் படங்கள் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்பு!

By manimegalai a  |  First Published Nov 30, 2023, 5:07 PM IST

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில், திரையிடப்படும் 12 தமிழ் படங்கள் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது.
 


ஒவ்வொரு ஆண்டும் சென்னையில், பிரமாண்டமாக நடத்தப்படும் சென்னை சர்வதேச திரைப்பட விழா அடுத்த மாதம் துவங்க உள்ளது. வெற்றிகரமாக 21 வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ள, இந்த சென்னை சர்வதேச திரைப்பட விழாவை, சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் அமைப்பு நடத்த உள்ளது.

டிசம்பர் 14ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நடைபெறும் இந்த சர்வதேச திரைப்பட விழாவில் சுமார் 57 நாடுகளைச் சேர்ந்த 126 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளது.  இந்நிலையில் இந்த விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ள 12 திரைப்படங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.

Tap to resize

Latest Videos

Indhuja: 9 வருட தோழி... பூர்ணிமா விஷயத்தில் இப்படி நடந்து கொண்டது ஏன்? புகைப்படங்களுடன் இந்துஜா போட்ட பதிவு!

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அதன்படி இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான அநீதி, தங்கர் பச்சான் இயக்கத்தில் வெளியான கருமேகங்கள் கலைகின்றன, மாரி செல்வராஜின் மாமன்னன், மந்திர மூர்த்தி இயக்கிய அயோத்தி, விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் வெளியான ராவணக்கோட்டம், விக்னேஷ் ராஜா இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற போர் தொழில், பிரபு சாலமன் இயக்கிய செம்பி, அனில் இயக்கிய சாயாவனம், வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை பாகம் 1, கார்த்திக் சீனிவாசன் இயக்கிய உடன்பால், சந்தோஷ் நம்பி ராஜன் இயக்கத்தில் வெளியான ஸ்டார்ட் கேமரா ஆக்சன் மற்றும் அமுதவாணன் இயக்கத்தில் வெளியான விந்தியா விக்டிம் வெர்டிக்ட் வி3 ஆகிய படங்கள் திரையிடப்பட உள்ளன.

click me!