100 சதவீத இருக்கைகளுக்கு எதிரான வழக்கு... நீதிமன்றம் எச்சரிக்கை..!

Published : Jan 08, 2021, 12:25 PM IST
100 சதவீத இருக்கைகளுக்கு எதிரான வழக்கு... நீதிமன்றம் எச்சரிக்கை..!

சுருக்கம்

100 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள் செயல்படலாம் என்ற தமிழக அரசின் அறிவிப்பை எதிர்த்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த, உயர்நீதி மன்ற மதுரை கிளை... வரும் 11 ஆம் தேதிக்குள் தமிழக அரசு இதற்க்கு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பிரச்சனை காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டிருந்த தியேட்டர்கள், கடந்த 15ம் தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரைப்படங்களை ஒளிபரப்ப தமிழக அரசு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் தொற்று பீதி காரணமாக தியேட்டர்களில் பார்வையாளர்களின் வருகை கணிசமாக குறைந்தே காணப்பட்டது. 

தற்போது தமிழகத்தில் தொற்றின் தாக்கம் குறைந்துள்ளதை அடுத்து பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியாக உள்ள 'மாஸ்டர்' மற்றும் 'ஈஸ்வரன்' ஆகிய திரைப்படங்களுக்கு திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. 

தமிழக அரசிடம் தயாரிப்பாளர்கள் சங்கம், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் மற்றும்  நடிகர்கள் விஜய், சிம்பு உட்பட திரையுலகினர் பலரும் தொடர்ந்து கோரிக்கை வைத்ததன் விளைவாக  கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசனை வெளியிட்டு அறிவித்திருந்தார். 

இதற்கு திரையுலகினர் பலரும் நன்றி தெரிவித்த போதும், மூடப்பட அறைக்குள் கொரோனா வேகமாக பரவும் என்பதால் அனுமதி ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்ற வலியுறுத்தி மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். மேலும் தமிழகத்தில் தியேட்டர்களுக்கு 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை திரும்ப பெற வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது. தற்போது தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்ததற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

இதனிடையே சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கறிஞர் மனு தாக்கல் செய்துள்ளார். 100 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள் செயல்படலாம் என்ற தமிழக அரசின் அறிவிப்பை எதிர்த்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த, உயர்நீதி மன்ற மதுரை கிளை... வரும் 11 ஆம் தேதிக்குள் தமிழக அரசு இதற்க்கு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு பதிலளிக்காவிட்டால் நீதி மன்றம் உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்று, எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!