தீ முகம் தான், யார் இவன் தான்... பார் இடிதான்... தல வெறித்தனம்!!

Published : Jul 21, 2019, 03:26 PM IST
தீ முகம் தான், யார் இவன் தான்... பார் இடிதான்... தல வெறித்தனம்!!

சுருக்கம்

வா மோதிப்பாரு அடிச்சு மிதிச்சு ஆட்டம் முடிக்க வா வேட்டையாடு வெள்ளைத்தாடி வெளிச்சம் அடிக்க போய் எண்ணிப்பாரு.. உதைச்ச உதையில் உடைஞ்ச எலும்ப யார் இந்த ஆளு? என ரியல் வெறித்தனம் இந்த பாடல் வரிகளில் தெறிக்கிறது. 

இந்தி  பிளாக்பஸ்டர், ‘பிங்க்’ ரீமேக்கான  ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் தமிழில் ரீமேக்கில்  அமிதாப் நடித்த அட்வக்ட் ரோலில் தல அஜித் நடித்துள்ளார். படம் ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாகும் இந்த படத்தில் அஜித்துக்கு  ஜோடியாக வித்யாபாலன் நடித்துள்ளார் மேலும், ஸ்ரத்தா ஸ்ரீநாத், பிக் பாஸ் அபிராமி உட்பட பலர் நடித்துள்ளனர் இந்த மெகா பிளாக்பஸ்டர் படத்தை அஜித் கேட்டுக்கொண்டதால் ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார், யுவன் சங்கர் ராஜா இசையில்  கடந்த மாதம் வெளியாகி டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றது.  

இதனைத் தொடர்ந்து 'வானில் இருள்' என்ற பாடலின் பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டது. அந்தப்பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர், மற்றொரு பாடலும் வெளியிடப்பட்டு வரவேற்பை பெற்றுள்ள நிலையில்,தீ முகம் தான் பாடலின் லிரிக்கல் வீடியோ நேற்று மாலை வெளியானது.  

யார் இவன் தான்
ஓர் அடிதான் 
பார் இடிதான் 
நீ எதிரியா உதிரியா பதறியே வா 
இமைப்பதும் வெடி இவன் நெருக்கடி 

வா மோதிப்பாரு
அடிச்சு மிதிச்சு ஆட்டம் முடிக்க
வா வேட்டையாடு
வெள்ளைத்தாடி வெளிச்சம் அடிக்க
போய் எண்ணிப்பாரு
உதைச்ச உதையில் உடைஞ்ச எலும்ப
யார் இந்த ஆளு
இறங்கி பிடிப்பான் எதிரி நரம்ப

பிரிச்சு பிரிச்சு மேயுறான்
துரத்தித் துரத்தி வெளுக்குறான்
உள்ள கொதிக்கும் நெருப்பத்தான்
உறிச்சி உறிச்சி எடுக்கிறான்
அடங்க அடங்க மறுக்குறான்
அலங்க கலங்க மிதிக்கிறான்
புரட்டிப் புரட்டி எடுக்கிறான் 
பையில் புயலை அடைக்கிறான்... " யுவன்ஷங்கர் ராஜா இசையில் பா.விஜய் பாடல் வரிகளில் உருவாகிய இந்த பாடலை அஜித்தின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

யார் இந்த அதிரே அபி? மெகா ஸ்டார் பிரபாஸுடன் இவருக்கு இவ்வளவு நெருக்கமா? வைரலாகும் பின்னணி!
15 வருடங்களாக நாகார்ஜுனாவை வாட்டும் நோய்! ஏன் இன்னும் குணமாகவில்லை? கவலையில் ரசிகர்கள்!