
பிக்பாஸ் வீட்டில் இருந்து வாரம் ஒரு நபர் எவிக்ஷன் செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் இந்த வாரம் எவிக்ஷன் பட்டியலில் அபிராமி, சேரன், மோகன் வைத்தியா, சரவணன், மற்றும் மீரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த வாரமே மோகன் வைத்தியா, வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வனிதா வெளியேறினார். இவர் வெளியில் சென்றது சில போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எனவே இந்த வாரம், மோகன் வைத்தியா தான் வெளியேறுவார் என கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு தெரியாது. எனவே தற்போது நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள், தாங்கள் தான் இந்த வாரம் வெளியேறும் நபரா என குழப்பத்தில் உள்ளனர்.
அதிலும், நடிகை அபிராமி வெளியில் செல்லும் அளவிற்கு நான் என்ன தவறு செய்தேன் என அழுகிறார். அவரை சேரன், முகேன் ஆகியோர் சமணத்தின் செய்கின்றனர். மோகன் வைத்தியா மனதளவில் வெளியேற தயாராகி விட்டார் என்பது அவர் இந்த ப்ரோமோவில் பேசுவதன் மூலம் தெரிகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.